தீயைப் போன்ற
ஒளி கொண்ட செங்குருமணி முதல் செறிந்த பல
வகை மணிகளும், அகன்ற வாயிடத்து நெய்யால் எரியும் விளக்கின் தொகுதியும் பெருகி,
இடந்தோறும் எரிந்த பசும் பொன் விளக்குகளும்
ஒன்றாய்ச் சேர்ந்து பேரொளியாகத் திரண்டு, பார்த்த கண் கூசச் செய்தன.
அவ்வாறு கூசிய கண்கள் குளிருமாறு, மேலே எரிகின்ற கதிரவனை இள
மேகம் மூடி மறைத்ததுபோல், எந்நாளும் அகில் முதலிய நறுமணப்
புகைகள் மூடி மறைத்தன.
47
|
முருடொடு
பம்பை யொலிவயி ரொலிவன் முரசொடு வளையொலி
யொலித்த
தெருடொடு மினிய குழலொலி வீணை செறியொலி கின்னரத்
தொலிநன்
மருடொடு மதுரப் பல்லிய மொலிப்ப மாகதர் பாவொலி
யிசைந்திவ்
வருடொடு மொலிகள் கடலொலி யொழிக்கு மரியவின்
பிருசெவி மாந்த. |
|
முருடொடு பம்பை
ஒலி, வயிர் ஒலி, வன் முரசொடு வளை ஒலி,
ஒலித்த
தெருள் தொடும் இனிய குழல் ஒலி, வீணை செறி ஒலி, கின்னரத்து
ஒலி, நல்
மருள் தொடும் மதுரப் பல் இயம் ஒலிப்ப, மாகதர் பா ஒலி இசைந்து,
இவ்
அருள் தொடும் ஒலிகள் கடல் ஒலி ஒழிக்கும் அரிய இன்பு இரு
செவி மாந்த. |
முருடு என்னும்
வாத்தியத்தோடு பம்பையின் ஒலியும், ஊது கொம்பின்
ஒலியும், வன்மையான முரசின் ஒலியோடு சங்கின் ஒலியும், நெடுந்தூரம்
எட்டுமாறு ஒலித்த தெளிவு பொருந்திய இனிய நாதசுரக் குழலின் ஒலியும்,
வீணையின் செறிவான ஒலியும், கின்னரத்தின் ஒலியும், நன்முறையில் மயங்கி
உள்ளத்தைத் தொடும் இனிமையான பல இசைக் கருவிகளும் கூடி ஒலிக்கும்.
துதி பாடுவோர் பாட்டொலியும் அதனோடு சேர்ந்து ஒலிக்கும். இவ்வாறு,
மக்கள் இரு செவிகளும் இன்பம் அருந்துமாறு, அருளுணர்வைத் தூண்டும்
இவ்வொலிகள் கடலின் முழக்கத்தையும் ஒழித்து மேலோங்கி நிற்கும்.
|