6 |
வண்டமி
ழினிதிற் கேட்ட மடக்கிளி கிளற்றும் புற்சொற்
கொண்டுமிழ்ந் துரைப்ப நூலோர் குறையெனக் கேளார் கொல்லோ
வுண்டமிழ் துமிழ்ந்தா லென்ன வுலகொருங் காள்வாள்
சொன்ன
பண்டமிழ் துண்டி யான்புற் பாவொடு கக்கக் கேட்பார். |
|
வண் தமிழ் இனிதின்
கேட்ட மடக்கிளி, கிளற்றும் புன்சொல்
கொண்டு, உமிழ்ந்து உரைப்ப, நூலோர் குறை எனக் கேளார்
கொல்லோ?
உண்டு அமிழ்து உமிழ்ந்தால் என்ன, உலகு ஒருங்கு ஆள்வாள் சொன்ன
பண்டு அமிழ்து உண்டு, யான் புன் பாவொடு கக்கக் கேட்பர். |
வளமான தமிழ்ச்
சொல்லை இனிமையாகக் கேட்ட ஓர் இளங்கிளி,
தான் இயல்பாகச் சொல்லும் திருந்தாத சொல்லைக் கொண்டு, உமிழ்ந்தாற்
போல் அதனைச் சொல்ல, நூலில் வல்ல புலவர் அதனைக் குறையுடையது
என்று கேளாதிருப்பரோ? உலகமெல்லாம் ஒன்றாய் ஆள்பவளாகிய கன்னி
மரியாள்,தான் உண்ட அமிர்தத்தை உமிழ்ந்தாற்போல் சொன்ன பழைய
கதையாகிய அமிர்தத்தை நானும் உண்டு, என் திருந்தாத செய்யுளோடு
கலந்து கக்க, அப்புலவர் கேட்பர்.
'கிளத்தல்'
என்ற சொல்லைக் 'கிளற்றுதல்' என்று கொண்டு,
அதற்கேற்ப வினை வடிவங்களை அமைத்தல் முனிவர் இயல்பு. 'கேளார்
கொல்லோ' என்றவிடத்துக் 'கொல்' அசைநிலை; ஓகாரம் எதிர்மறை.
கதை
வந்த வழி
7 |
அடவியால்
வனப்பில் வாய்ந்த வாகிர்த வெனுந கர்க்குட்
புடவியா லுவமை நீத்த புகழ்வரத் துயர்ந்த கன்னி
நடவியார் தவத்தி லோங்கி நாதனை யீன்றா டாளைத்
தடவியார் வுயரப் போற்றித் தகவடைந் திருந்தா ளன்றோ. |
|