பக்கம் எண் :

முதற் காண்டம்90

மீ முறை ஒப்ப நாள் தொறும் குறை இல் வேதியர் அருச்சனை
                                       திருத்தும்
மா முறை நலமும், வானொடு வையம் மருள நல் அற நெறி வழங்கும்
யா முறை அனைத்தும் இன்பு உறக் கண்டார் இமைப்பு இலது அயர்வு
                                      உறும் அல்லால்,
பா முறை நடத்தித் தொடைச் சரம் தொடுத்துப் பகர்ந்து அவை
                                      புகழ்வது பாலோ?

     மேலுலகில் நடைபெறும் முறைமைக்கு ஒப்பாக நாள்தோறும்
குறையொன்றும் இல்லாத குருக்கள் வழிபாடு நிகழ்த்தும் சிறந்த முறையின்
நலமும், இவ்வுலகம் வானுலகமோ என்று மயங்குமாறு நல்ல அறநெறி
நடைமுறையாக வழங்கும் முறைகள் எல்லாவற்றையும் இன்புறக் கண்ட
எவரும் இமைகொட்டாது நோக்கி அயர்ந்து போவாரே அல்லாமல்,
செய்யுள் முறைப்படி நடத்தி, எதுகை மோனை முதலிய தொடை வகைக்கு
அமைந்த கண்ணி மாலையாகத் தொடுத்துச் சொல்லி, அவற்றைப் புகழும்
தன்மை கவிஞருக்கும் இயல்வதோ?

     'முறை அனைத்தும்' என்றதற்கு மேல் 'யா' வேண்டாதே நின்றது.
 
                       50
உலகெலாம் வணங்கும் பொதுவறத் தனிக்கோ லோச்சிய
                                   விறைவனை வணங்க
வலகெலாங் கடந்து பழுதறப் பயத்த வறநெறி யருமையா லுவமை
விலகெலா நயங்க டாங்கிய குடிகள் விழைவொடு வதித்தன
                                   தன்மைத்
திலகெலா நகரை நிலத்திடைப்பழிக்கு மெருசலே மென்னுமா
                                   நகரம்.
 
உலகு எலாம் வணங்கும், பொது அறத் தனிக்கோல் ஓச்சிய,
                                         இறைவனை வணங்க,
அலகு எலாம் கடந்து பழுது அறப் பயத்த அற நெறி அருமையால்,
                                        உவமை
விலகு எலா நயங்கள் தாங்கிய குடிகள் விழைவொடு வதிந்தன
                                        தன்மைத்து,
இலகு எலா நகரை நிலத்திடைப் பழிக்கும் எருசலேம் என்னும் மா
                                        நகரம்.