56 |
எழுதினி
துருவென வெழினல ரிழிவார்
வழுதினி தினிதல வழுவில விறையோன்
றொழுதினி தறநெறி துறுவன நயனாற்
பொழுதினி திரிவன பொருவில நகரே. |
|
எழுது இனிது உரு
என எழில் நலர், இழிவு ஆர்
வழுது இனிது இனிது அல, வழு இல இறையோன்
தொழுது, இனிது அறநெறி துறுவன நயனால்
பொழுது இனிது இரிவன பொருவு இல நகரே |
இனிதாக எழுதப்பட்ட
சித்திர வடிவம் போன்ற அழகுள்ள மகளிர்,
இழிவு நிறைந்த பொய்யான இன்பம் இன்பமல்ல என்று தெளிந்து,
குற்றமில்லாத ஆண்டவனைத் தொழுது, இனிமையாக அறநெறியால் வந்து
சேரும் இன்பத்தினால் மகிழ்ந்து, ஒப்பில்லாத அந்நகரில் பொழுதுகள்
இன்பமாகக் கழியும்.
'தெளிந்து'
எனவும், 'மகிழ்ந்து' எனவும் இரு சொற்கள் வருவித்து
உரைக்கப்பட்டன. நலர் - நல்லார் : மகளிர்.
57 |
பொறையிணை
நகுவனர் புயமலி பொருந
ருறையிணை நகுவன ருதவிய கொடையோர்
துறையிணை நகுவனர் துறுவிய கலையோர்
தறையிணை நகுவன தடமலி நகரே. |
|
பொறை இணை நகுவனர்
புயம் மலி பொருநர்
உறை இணை நகுவனர் உதவிய கொடையோர்.
துறை இணை நகுவனர் துறுவிய கலையோர்
தறை இணை நகுவன தடம் மலி நகரே. |
புய வலிமை
மிக்க வீரர் மலையின் ஒப்புமையை இகழ்வர்.
இரவலர்க்கு உதவிய கொடையாளர் மழையின் ஒப்புமையை இகழ்வர்.
நிறைந்த கலை வல்லோர் அத்துறையின் ஒப்புமையை இகழ்வர். நகரில்
மலிந்துள்ள பெருமைகள் உலகின் ஒப்புமையை இகழும்.
இகழ்தலாவது,
அவை தமக்கு ஈடாகா வகையில் மேம்பட்டு நிற்றல்.
'நகுவனர்' என்ற சொல்லின் இடையே 'அன்' சாரியை என்க. |