'ஆல்' அசைநிலை
'களிறு' நனியே சொல்லப்பட்டமையின் 'தானை'
என்ற விடத்து, தேர் குதிரை காலாள் என்ற முப்படையும் கொள்க. கோன்
- தாவீது மன்னன் வளையாத கோல் நீதியையும், குளிர் மாறாத குடை
கருணையையும் குறிக்கும்.
'கோடாதன'
என்பதுபோல் வருகின்ற பெயரெச்சங்களின் இடையே
'அன்' சாரியை.
62 |
சாலன்பொடு
நிறைதாய்முலை தழுவுஞ்சிறு குழவி
போலன்பொடு நகராள்பவ னருளின்றயை புரிசெங்
கோலன்பொடு தழுவுங்குடி குறையொன்றில நகரின்
பாலன்பொடு தனிவாழ்வொடு படுநன்றிய தளவோ. |
|
சால்
அன்பொடு நிறை தாய் முலை தழுவும் சிறு குழவி
போல் அன்பொடு நகர் ஆள்பவன் அருளின் தயை புரி செங்
கோல் அன்பொடு தழுவும் குடி, குறை ஒன்று இல, நகரின்
பால் அன்பொடு தனி வாழ்வொடு படு நன்றியது அளவோ |
மிக்க அன்போடு
பால் நிறைந்த தாயின் முலையைத் தழுவி அருந்தும்
குழந்தை போல், அன்போடு அந்நகரத்தை ஆள்பவன் அருளோடு கருணை
புரியும் செங்கோலை அன்போடு தழுவும் குடிகள், குறை ஒன்றும் இல்லாது,
அந்நகரின்பால் அன்போடும் ஒப்பற்ற செல்வ வாழ்வோடும் அனுபவிக்கும்
நன்மைக்கு அளவும் உண்டோ?
'காவல், குழவி
கொள்பவரின் ஒம்புமதி' - புறம் 15
63 |
இருந்தோடிய
திருவிங்கணி லினிதன்புற விடலாற்
பருந்தோடுறு நிழலென்றுயர் பயனீன்றன வெனவே
மருந்தோடிக லரிதன்புற மலிகின்றன மரபோர்
விருந்தோடுண வருகின்றன ரிலையென்றுள மெலிவார். |
|
இருந்து
ஓடிய திரு இங்கணில் இனிது அன்பு உற இடலால்,
பருந்தோடு உறும் நிழல் என்று, உயர் பயன் ஈன்றன எனவே,
மருந்தோடு இகல் அரிது அன்பு உளம் மலிகின்றன மரபோர்,
விருந்தோடு உண வருகின்றனர் இலை என்று உளம் மெலிவார். |
|