பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்100

மெய்ந் நூல் திறத்துள், இவை யாவும், இன்பம் மிக உம்பர் கேட்டு,                                              விரிவாய்,
கைந் நூல் திறத்து நிகராத மாலை, கடிது ஆக, வாச மலரை
அம் நூல் திறத்து வடிவாக வீக்கி, அடிமேல் இறைஞ்சி அணிய
எந் நூல் திறத்து இணையாத ஆசி இனிது அன்று பாடி, இடுவார்.

     மெய்யான வேத நூலில் கண்ட தன்மைக்கு ஏற்ப, இவற்றையெல்லாம்
மிக்கயேல் விரிவாய்க் கூற, ஏனைய வானவர் இன்பம் மிகக் கேட்டு,
விரைவாக, வாசனையுள்ள மலர்களை அழகிய பொன் நூலில் இணைத்து,
கைத்தொழில் நூல் திறத்தாலும் நிகரற்ற ஒரு மாலையை நல்ல வடிவமாகக்
கட்டி, எந்த நூல் திறத்தாலும் ஒப்புக் கூற இயலாத வாழ்த்துக்களை அன்று
இனிதாகப் பின்வருமாறு பாடி, திருமகனின் அடிமேல் வணங்கி அணிய
இடுவர்.

     அம்நூல் - அழகிய நூல் : அழகிய பொன் நூல்.

                      139
"மாற்றாரை மாய்த்த கதநீதி மாற்றி மாற்றாரை யாற்ற மனுவா
யேற்றாரை யேற்ப வடுகால நீக்கி யேற்றாரை யேற்ற விழிந்தே
தேற்றாரை யாற்ற வழுதாவி வாழ்த றேற்றாரை யுய்ப்ப மடிவா
யாற்றாரை யாற்று மருளாய்ந்தி யாரு னருவீர வாண்மை
                                         யறிவார்.
 
"மாற்றாரை மாய்த்த கத நீதி மாற்றி, மாற்றாரை ஆற்ற மனு ஆய்,
ஏற்றாரை ஏற்ப அடுகாலம் நீக்கி, ஏற்றாரை ஏற்ற இழிந்தே,
தேற்றாரை ஆற்ற அழுது, ஆவி வாழ்தல் தேற்றாரை உய்ப்ப மடிவாய்;
ஆற்றாரை ஆற்றும் அருள் ஆய்ந்து, யார் உன் அரு வீர ஆண்மை
                                                அறிவார்?

     "பகைவரை இவ்வாறெல்லாம் மடிவித்த சினத்தோடு நீதி செலுத்தும்
பழைய முறையை மாற்றி, பகைவரைப் பொறுத்துக் காக்குமாறு இந்நாளில்
நீ மனிதனாக வந்துள்ளாய்; போற்றாதவரைத் தகுந்த முறையில் கொல்லும்
பழங்கால முறையை நீக்கி, ஏற்றவரை யெல்லாம் வானலகிற்கு ஏற்ற
வென்று நீயே இவ்வுலகில் இறங்கி வந்துள்ளாய்; தேறாதவரைத் தேற்றுமாறு
நீயே அழுது, தம் உயிர் என்றும் வாழ்வதற்குரிய வழியைத் தெளிய
உணராதவரை