உயிர் விடுவாரும்
உண்டு; மாளிகைகள் நெருப்பினால் தாக்குண்டு இடிய,
அவற்றில் வாழ்ந்தவரும் அவற்றோடு நெரிந்து மடிவாரும் உண்டு;
பக்கத்துள்ள யாவற்றையும் உண்டு தீர்த்து, அதன் மேலும் குறையாமல்
சூழ்ந்து நிறையும் தீயில் மடிவாரும் உண்டு. அவ்வாறன்றி சுடும் அந்
நெருப்பு மழையால் உண்ணப்படாதவர் யார்?
137 |
விரகங்கொ
டீய மிறையாவும் வேக விரிநீதி தூண்டும் விளியா
நரகங்கொ டீயி னிகர்தோற்று மாரி நனியாக விட்ட விவனே
யுரகங்கொ டீய விடமிஞ்சு பாவ முருவாகி மாறு கருணைச்
சிரகங்கொ டூய முகிலாக வின்று திரிநாத னென்று தொழுதான். |
|
"விரகம் கொள்
தீய மிறை யாவும் வேக, விரி நீதி தூண்டும் விளியா
நரகம் கொள் தீயின் நிகர் தோற்று மாரி நனியாக விட்ட இவனே,
உரகம் கொள் தீய விடம் மிஞ்சு பாவம், உரு ஆகி, மாறு கருணைச்
சிரகம் கொள் தூய முகிலாக, இன்று, திரி நாதன்" என்று தொழுதான். |
"காமம் முதலாகக்கொண்ட
தீய பாவங்கள் யாவும் வெந்து ஒழியுமாறு,
அந்நாளில் தனது விரிந்த நீதியால் தூண்டப்படும் அழியாத நரகம்
கொண்டுள்ள தீயின் நிகராகத் தோன்றும் நெருப்பு மழையை மிகுதியாக
ஏவிவிட்ட இவனே, இன்று, மானிட உருவாகி, நாகப் பாம்பு கொண்டுள்ள
தீய நஞ்சையும் மிஞ்சிய பாவத்தை மாற்றி மீட்கும் கருணை மழைத்
துளியைக் கொண்டுள்ள தூய மேகமாக இன்று அலைந்து திரியும்
ஆண்டவன்" என்று மிக்கயேல் முடித்துக்கூறி, அவ்வாண்டவனைத்
தொழுதான்.
வானவர்
புகழ்ச்சிப் பாடல்
மெய்ந்நூற்றி
றத்து ளிவையாவு மின்ப மிகவும்பர் கேட்டு
விரிவாய்க்
கைந்நூற்றி றத்து நிகராத மாலை கடிதாக வாச மலரை
யந்நூற்றி றத்து வடிவாக வீக்கி யடிமேலி றைஞ்சி யணிய
வெந்நூற்றி றத்து மிணையாத வாசி யினிதன்று பாடி யிடுவார். |
|