135 |
நாலோடு நாலு
திசையோடி யோடி நனியாய்ந டுங்கி நலியக்
காலோடு காலு மெரிகெந்த கஞ்செய் கனலாலெ ரிந்த பலவோ
டாலோடு மாலு மழலாலி மண்டி யவியாத காம வசடர்
மாலோடு மாலு மிகமாழ்கி வெந்து மதியாதெ லாரு மடிவார். |
|
"நாலோடு நாலு
திசை ஓடி ஓடி நனியாய் நடுங்கி நலிய,
காலோடு காலும் எரி கெந்தகம் செய் கனலால் எரிந்த பலவோடு,
ஆலோடு மாலும் அழல் ஆலி மண்டி அவியாத காம அசடர்,
மாலோடு மாலும் மிக மாழ்கி வெந்து மதியாது எலாரும் மடிவார |
"அவியாத காமத்துக்கு
ஆளாகிய அவ்வசடர், நாலோடு நாலு கூட்டிய
எட்டுத் திசைகளிலும் மாறிமாறி ஓடி மிகவே நடுங்கி நலிந்து, காற்றோடு
பொழியும் எரிகந்தகம் விளைவித்த நெருப்பால் எரிந்த பலவற்றோடு தாமும்
எரிந்து ஆலமரமோ என்று மயங்கத் தக்க நெருப்பு மழை மண்டித் தம்மைச்
சூழ்ந்து கொள்ளவே, மிகுந்த மயக்கத்தில் மிக ஆழ்ந்து எண்ணில்
அடங்காது யாவரும் வெந்து மடிவர்.
136 |
வீழ்ந்தாரு
மேறு படுவாரு முண்டு வெருவாக முண்டு மனையின்
றாழ்ந்தாரு மாவி விடுவாரு முண்டு தழல்மாட முண்டு தகர
வாழ்ந்தாரு மாகி நெரிவாரு முண்டு வயின்யாவு முண்டு வடியா
சூழ்ந்தாரு தீயி னெரிவாரு முண்டு சுடுமாரி யுண்ட திலையார். |
|
"வீழ்ந்து ஆரும்
ஏறு, படுவாரும் உண்டு; வெரு ஆகம் உண்டு,
மனையின்
தாழ்ந்து, ஆரும் ஆவி விடுவாரும் உண்டு; தழல் மாடம் உண்டு தகர,
வாழ்ந்தாரும் ஆகி, நெரிவாரும் உண்டு; வயின் யாவும் உண்டு, வடியா
சூழ்ந்து ஆரு தீயின் எரிவாரும் உண்டு; சுடு மாரி உண்டது இலை
யார்? |
"நிறைந்த இடிகள்
தம்மீது வீழ்ந்து, அதனால் இறப்பவரும் உண்டு;
மனத்தில் அச்சங் கொண்டு, தம் இல்லங்களினின்று இறங்கிவந்து, மிகுதியாக
|