"நெருப்பில்
அகப்பட்டு மக்கள் தரும் அலறல் ஓசை எங்கும்
எழுந்து நிற்கவும், அவர்கள் பட்ட துன்பத்தால் படர்ந்த உலகம்
முழுவதும் நெகிழவும், மேகத்தினின்று பொழியும் நெருப்பும், எங்கும்
இழிந்த காமம் முற்றி விளைந்த சோதும நகரத்தார் தம் விரக தாபமாகிய
உள்ளத்து நெருப்பும், எங்கும் அச்சத்தோடு அலைந்த உள்ளத்தின் வேகம்
முற்றி உருகும் கண்களினின்று பிறக்கும் நெருப்பும் எங்கும் விரவிக்
கலந்து, ஆகாயத்தை விரைந்து மூடி மொய்க்கும்படியாக எழுந்து நிற்கும்.
'பட்டு ஈயும்
ஓதை எங்கும் எழ' என்று மாற்றிக் கூட்டுக.
134 |
மேகங்கள்
வேக விடுமீன்கள் வேக விடியேறு வேக மிளிரு
மாகங்கள் வேக வெவாளிவேந்தன் வேக மனமஞ்சி மேக மறைய
வாகங்கள் வேக விழிகண்கள் வேக வறைநாவும் வேக வலைகொள்
வேகங்கள் வேக நதிவேக வேக வெருவாக வேலை யகல. |
|
"மேகங்கள் வேக,
இடு மீன்கள் வேக, இடி ஏறு வேக, மிளிரும்
மாகங்கள் வேக, ஒளி வேந்தன் வேக மனம் அஞ்சி மேகம் மறைய,
ஆகங்கள் வேக, விழி கண்கள் வேக அறை நாவும் வேக,
அலைகொள்
வேகங்கள் வேக, நதி வேக, வேக வெரு ஆக வேலை அகல. |
"மேகங்கள்
வேகவும், வானத்தில் இட்டு வைத்தாற் போன்ற
விண்மீன்கள் வேகவும், பேரிடிகள் வேகவும், ஒளிரும் வானத்து
இடங்களெல்லாம் வேகவும், தானும் வெந்து போவது பற்றி மனத்துள்
அஞ்சி ஒளி மன்னனாகிய பகலவன் மேகத்துள் மறையவும், நினைத்த
மனங்கள் வேகவும், விழித்துப் பார்த்த கண்கள் வேகவும், அது பற்றிப்
பேசிய நாவுகள் வேகவும், அலைகள் கொண்ட கடுமை வெந்து மறையவும்,
ஆறுகள் வேகவும், தான் வெந்து போவது பற்றிய அச்சம் காரணமாகக்
கடலும் பின்வாங்கி அகலும்.
'அகல'
என்ற வினையெச்சம் அடுத்த பாடலிலுள்ள 'மடிவார்' என்ற
முற்றோடு பொருள் முடியும்.
|