132 |
புரிவாய்பி
ளந்த விறையோனு டன்று புரிசாப மென்று கடிதே
யெரிவாய்பி ளந்த முகிலேயு மிழ்ந்த விடியேற திர்ந்து படலான்
முரிவாய்பி ளந்த முகிறாவு யர்ந்த முடிமாட மெங்கு முரிய
விரிவாய்பி ளந்த முகில்காலு மங்கி விளியாதெ ரிந்துபொழிய, |
|
"புரி வாய் பிளந்த
இறையோன் உடன்று புரி சாபம் என்று, கடிதே
எரி வாய் பிளந்த முகிலே உமிழ்ந்த இடி ஏறு அதிர்ந்து படலான்,
முரி வாய் பிளந்த முகில் தாவு உயர்ந்த முடி மாடம் எங்கும் முரிய,
விரி வாய் பிளந்த முகில் காலும் அங்கி விளியாது எரிந்து பொழிய, |
"வாய் திறந்து
சொல்லியதை அவ்வாறே செய்யக்கூடிய ஆண்டவன்
சினந்து செய்த சாபம் போல, தம் எரியும் வாயைத் திறந்த மேகங்கள்
கக்கிய பேரிடிகள் விரைவாய் அதிர்ந்து விழுதலால், முறிந்த தன்மையாய்த்
தம் வாயைப் பிளந்து நின்ற மேகங்களுக்கு மேல் தாவும் உயர்ந்த
உச்சியைக் கொண்ட மாளிகைகள் எங்கும் இடிந்து விழுமாறு, விரிந்த
தம் வாயைப் பிளந்த அம்மேகங்கள் கக்கும் நெருப்பு அவியாமல்
எரிந்த வண்ணம் பொழிந்தன.
அங்கி - அக்கினி:
நெருப்பு.
133 |
பட்டீயு மெங்கு
மெழவோதை பட்ட படர்ஞால முற்று நெகிழ
விட்டீயு மெங்கு மிழிகாம முற்றி விளைசோது மத்தர் விரகத்
துட்டீயு மெங்கும் வெருவோடு முற்ற வுளவேக முற்றி யுருகுங்
கட்டீயு மெங்கும் விரவே கலந்து கடிமாக மொய்ப்ப வெழுமே. |
|
"பட்டு ஈயும்
எங்கும் எழ ஓதை, பட்ட படர் ஞாலம் முற்றும் நெகிழ,
விண் தீயும், எங்கும் இழி காமம் முற்றி விளை சோதுமத்தர் விரகத்து
உள் தீயும், எங்கும் வெருவோடும் உற்ற உள வேகம் முற்றி உருகும்
கண் தீயும் எங்கும் விரவே கலந்து, கடி மாதம் மொய்ப்ப எழுமே. |
|