"வேதம் என்ற
ஒன்று இல்லாமலும் தவம் என்ற ஒன்று இல்லாமலும்
மயங்கும் காரணத்தால் அறவொழுக்கம் மடியவும், புலனடக்கம் என்ற
ஒன்று இல்லாமலும் ஒழுங்கு என்ற ஒன்று இல்லாமலும் நெகிழ்கின்ற
காரணத்தால் நீதி நீங்கவும், இயல்பான முறை என்ற ஒன்று இல்லாமலும்
வரையறை என்ற ஒன்று இல்லாமலும் முறிந்து நடக்கும் காரணத்தால்
காமம் முதிரவுமாக, கட்டுப்பாடு என்ற ஒன்று அறவே இல்லாமல்
சிதைகின்ற ஒரு நாடு என்ன ஆகும்? மூளுகின்ற நெருப்புக்கே இரையாகும்.
131 |
முடிகோடி கோடி
கதிர்காலு மேக முதலேவ லாகி யசனி
யிடிகோடி கோடி யெரியோடு வீழ வெதிரோதை சீற வெரிவான்
றுடிகோடி கோடி துறுமோதை போலு சுடுசூல கோர முகிலே
கடிகோடி கோடி குடியாயு லாவு கடுநாடு மூடி மிடைய. |
|
"முடி கோடி கோடி
கதிர் காலும் ஏக முதல் ஏவல் ஆகி, அசனி
இடிகோடி கோடி எரியோடு வீழ, எதிர் ஓதை சீற, எரி வான்
துடி கோடி கோடி துறும் ஓதை போலு சுடு சூல் அகோர முகிலே,
கடி கோடி கோடி குடியாய் உலாவு கடு நாடு மூடி மிடைய, |
"தன் கோடாகோடி
முடிகள் கதிரொளியைப் பரப்பும் ஒரே
முதல்வனாகிய இவ்வாண்டவனின் கட்டளைக்கு அமைந்து, இடிமேல்
இடி கோடாகோடிக் கணக்கில் நெருப்போடு கூடி விழவும், எதிரெதிராக
அவற்றின் ஓசை சீறி எழுவுமாக, எரியும் வானம் கோடா கோடிப்
பறைகளினின்று செறியும் ஓசை கொண்டது போல் தோன்றும் சுடும்
தன்மையைச் சூலாகக் கொண்ட கொடிய மேகங்கள், கோடாகோடிப்
பேய்கள் குடி கொண்ட தன்மையாய் உலாவும் அக் கொடிய நாட்டை
மூடிய தன்மையாய்த் திரண்டன.
அசனியும்
இடியாக, இடியும் இடியாக, இரண்டுங் கூட்டி, 'இடிமேல்
இடி' எனக் கொள்க. 'மிடைய' என்ற வினையெச்சம் 133-ம் பாடலில்
'எழுமே' என்ற முற்றோடு முடிவதாதலின், 'மிடைந்தன' என்று கொண்டு
முடிக்கப்பட்டது. அடுத்த பாடலுக்கும் இது பொருந்தும்.
|