"கான் ஊறு நேமி
காணாது மூடு காவாத வாரி கழிவு ஆய்,
நானூறும் ஆக நால் மூன்றும் ஆக நால் ஆண்டும் ஆகி,
நவை
ஆர்
ஊன் ஊறு, சோதுமத்தாரது ஐந்தும் ஊர் உற்ற, பாவம் ஒழிய,
வான் ஊறு தீயை ஓர் மாரி ஆக வான் வாரினான் இம் மகனே. |
"காடுகள் பெருகிய
இவ்வுலகம் வெளியே தெரியாதவாறு
மூடிக்கொண்ட, எவரும் காக்க இயலாத வெள்ளப் பெருக்கு நிகழ்ந்து
கடந்துபோய், நானூறோடு நால் மூன்று பன்னிரண்டும் அதனோடு
நாலுமாக நானூற்றுப் பதினாறு ஆண்டுகள் ஆகிய பின், சோதுமம் என்ற
நகரத்தாரோடு தொடர்புள்ள ஐந்து ஊர்களும் கொண்ட குற்றமுள்ள ஊன்
இயல்பால் ஊறும் காமப் பாவம் ஒழியுமாறு, வானத்தினின்று பிறந்த
நெருப்பை ஒரு மழையாக வானத்தினின்று பொழிய விட்டவனும்
இம்மகனே ஆவான்.
400 + (4 (
3) + 4 = 416 ஆண்டுகள். வாரினான்-வார்த்தான்:
'வார்' என்ற பகுதிக்கு உரிய 'த்' என்ற இறந்த கால இடை நிலைக்குப்
பதிலாக 'இன்' இடைநிலை தந்து அமைத்த புதுமைச் சொல். 'ஐந்தும் ஊர்'
என்பதனை, 'ஐந்து ஊரும்' எனப் பிரித்துக்காட்டுக. ஐம்பதிகள்
அழிந்த
செய்தி: ப. ஏ., ஆதியாகமம், 18-19 அதிகாரங்கள் காண்க.
130 |
மறையொன்றி
லாது தவமொன்றி லாது மருள்கின்ற சீல மடிய
நிறையொன்றி லாது நிரையொன்றி லாது நெகிழ்கின்ற நீதி யகல
முறையொன்றி லாது வரைவொன்றி லாது முரிகின்ற காம முதிரச்
சிறையொன்றி லாது சிதைகின்ற நாடு திளைகின்ற தீயி னிரையாம். |
|
"மறை ஒன்று இலாது,
மறை ஒன்று இலாது மருள்கின்ற சீலம் மடிய,
நிறை ஒன்று இலாது, நிரை ஒன்று இலாது நெகிழ்கின்ற நீதி அகல,
முறை ஒன்று இலாது, வரைவு ஒன்று இலாது முரிகின்ற காமம் முதிர,
சிறை ஒன்று இலாது சிதைகின்ற நாடு திளைகின்ற தீயின் இரைஆம். |
|