புல்லிலுள்ள
கரையில் தங்கிய அவ்விருவரும், தம் பக்கத்தே
பரந்து கிடந்ததொரு நிலம், எல்லையும் இல்லாமல், ஒரு நிழலும் இல்லாமல்,
சாம்பலாய் விளங்கும் உயர்ந்த ஓர் அரை மலை என்னத் தக்கவாறு
கிடக்கக் கண்டனர். கண்டதும், மாலை என்று சொல்லத்தக்க பூங்கொடி
கொண்ட சூசை வானவரை அழைத்து, "அது என்ன?" என்று வினவினான்.
புல்+அம்+கரை
- 'புல்லங்கரை' என்பது, 'புலங்கரை' என
இடைக்குறையாய் நின்றது.
128 |
இன்னவை மிக்கயே
லிறைஞ்சிக் கேட்டவண்
பன்னவை மிடைந்தஐம் புரத்திற் பண்டுநா
டுன்னவை யிளவறன் னாண்மை தோற்றுமென்
றன்னவை கேண்மினென் றணுகிக் கூறினான். |
|
இன்னவை மிக்கயேல்
இறைஞ்சிக் கேட்டு, அவண்
பல்நவை மிடைந்தஐம்புரத்தில் பண்டு நாள்
துன் அவை இளவல் தன் ஆண்மை தோற்றும் என்று,
"அன்னவை கேண்மின்" என்று அணுகி, கூறினான்: |
மிக்கயேல்
என்ற வானவன் வணங்கி இதனைக் கேட்டு, அங்கே
பல பாவங்கள் நிறைந்து கிடந்த ஐந்து நகர்களிலே பண்டை நாளில்
நேர்ந்த அவை குழந்தைநாதனின் வலிமையைப் புலப்படுத்தும் என்று
தெரிந்து, "அதனைப் பற்றிக் கேளுங்கள்" என்று அடுத்துச் சென்று,
பின்வருமாறு கூறத் தொடங்கினான்.
இன்னவை,
அன்னவை என்பன, இவை, அவை என்ற பன்மைப்
பொருள் உள்ளவை யெனினும், முந்திய பாடலில், "அஃது எது?" என
வினவியதற்கு ஏற்ப, இது, அது என ஒருமைப் பொருள் சுட்டினவாகக்
கொள்க.
ஐம்பதிகள்
அழிவு
-
மாங்காய், தேமா, - மாங்காய், தேமா, - மாங்காய், தேமா, புளிமா.
129 |
கானூறு நேமி காணாது மூடு காவாத வாரி கழிவாய்
நானூறு மாக நான்மூன்று மாக நாலாண்டு மாகி நவையா
ரூனூறு சோது மத்தார தைந்து மூருற்ற பாவ மொழிய
வானூறு தீயை யோர்மாரி யாக வான்வாரி னானிம் மகனே. |
|