பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்92

                         மேடு கண்டு சூசை வினவல்

     - விளம், - விளம், - மா, கூவிளம்

               126
பாணெறி பலவையும் பகர்ந்து வப்பெழீஇக்
கோணெறி யொளிமுகக் குழவி யேந்தினர்
சேணெறி கடந்துபோய்த் தெளிந்த வாவியைக்
காணெறி யெய்தியக் கரையை யண்மினார்.
 
பாண் நெறி பலவையும் பகர்ந்து, உவப்பு எழீஇ,
கோள் நெறி ஒளி முகக் குழவி ஏந்தினர்,
சேண் நெறி கடந்து போய், தெளிந்த வாவியைக்
காண் நெறி எய்தி, அக் கரையை அண்மினார்

     இசை முறையால் இவை போன்ற பலவும் கூறி, மகிழ்ச்சி
மேலோங்க, திங்கள் போன்ற ஒளி பொருந்திய முகத்துக் குழந்தை
நாதனை ஏந்திக்கொண்டவராய், சூசையும் மரியாளும் தூர வழியைக்
கடந்து போய், தெளிந்த நீருள்ள தடாகம் ஒன்றைக் காணக் கூடிய
வழியை அடைந்து, அதன் கரையை அணுகினர்.

     கோள் - கிரகம்; இங்கு நவக் கிரகங்களுள் ஒன்றாகிய
சந்திரனைக் குறித்தது.

                127
புலங்கரை வதிந்தனர் புடைய கன்றதோர்
நிலங்கரை யிலாதொரு நிழலி லாதுநீ
றிலங்கரை யுயர்மலை யெனக்கண் டும்பரை
யலங்கரை வாகையா னழைத்தஃ தேதென்றான்.
 
புல் அம் கரை வதிந்தனர், புடை அகன்றது ஓர்
நிலம், கரை இலாது, ஒரு நிழல் இலாது, நீறு
இலங்கு அரை உயர் மலை எனக் கண்டு, உம்பரை
அலம் கரை வாகையான் அழைத்து, "அஃது ஏது"
                                   என்றான்.