4 |
நீர்தவழுஞ்
செந்தீயோ நிலமகடன் றுவர்வாயோ
கார்தவழு மின்னினமோ கமலமலர்த் தடமொருபால்
வார்தவழும் புவிச்சிலம்போ மணிவரன்றி யொலித்தோடிப்
பார்தவழும் யாறொருபால் பணிக்கைபோற் றழுவினவே. |
|
நீர் தவழும்
செந்தீயோ, நில மகள் தன் துவர் வாயோ,
கார் தவழும் மின் இனமோ, கமல மலர்த் தடம் ஒரு பால்,
வார் தவழும் புவிச் சிலம்போ, மணி வரன்றி ஒலித்து ஓடிப்
பார் தவழும் யாறு ஒரு பால் பணிக் கை போல் தழுவினவே. |
நீரில் தவழும்
செந்தீயோ, நிலமகளின் பவளவாயோ, மேகத்தில்
தவழும் மின்னல் கூட்டமோ என்று கருதத் தக்க தாமரை மலர்த் தடாகம்
ஒரு பக்கமும், வாரால் கட்டிக் காலில் தவழும் நிலமகளின் சிலம்போ
என்று கருதத் தக்கவாறு மணிகளைக் கரையில் கொழித்து ஒலித்து ஓடித்
தரையில் தவழும் ஆறு மற்றொரு பக்கமுமாக அணிகொண்ட கை போல்
அச்சோலையைத் தழுவிக் கிடந்தன.
'கருதத் தக்க'
என்ற இணைப்புச் சொல் வருவித்து உரைக்கப் பட்டது,
இங்குக் குறித்த ஆறு சோர்தான் ஆறு என்பது 9-ம் பாடல் கொண்டு
தெளிக.
5 |
அத்தலையா
ரந்நிழற்கா வகட்டுறைந்தார் மாதவனு
மைத்தலையார் முகிலுலகின் வானுலகின் மேலுயர்ந்தோன்
மொய்த்தலையா ருலகெய்தி முற்றெளிய னுருக்கொண்டா
னித்தலையா னாண்மையைவா னெய்தினரே
சொன்மினென்றான். |
|
அத்தலையார்
அந் நிழல் கா அகட்டு உறைந்தார், மாதவனும்,
"மைத்து அலை ஆர் முகில் உலகின் வான் உலகின் மேல்
உயர்ந்தோன்,
மொய்த்து அலை ஆர் உலகு எய்தி, முற்று எளியன் உருக்
கொண்டான்;
இத் தலையான் ஆண்மையை, வான் எய்தினரே, சொல்மின்"
என்றான்.
|
அந்தத் தலைமையுடையார்
மூவரும் அந்த நிழலுள்ள சோலையின்
உட்புறம் தங்கினர். பெருந் தவத்தோனாகிய சூசை, வானவரை நோக்கி,
"கறுத்து அலையும் நிறைந்த மேகங்களின் உலகிற்கும் வானுலகிற்கும் மேல்
|