பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்106

     உயர்ந்து நிற்பவனாகிய ஆண்டவன், அலைகள் திரண்டு முழங்கும்
இம்மண்ணுலகை வந்தடைந்து, முற்றும் எளியவன்போல் கோலம்
கொண்டுள்ளான்; வானுலகினின்று இங்கு வந்தடைந்த வானவரே, இந்தத்
தலைமைகொண்ட ஆண்டவனின் வல்லமையை நீங்களே எடுத்துச்
சொல்லுங்கள்" என்றான்.


                    6
செய்ப்பட்ட வானவரும் திறமுனிசொற் கேட்டுவந்து
மெய்ப்பட்ட மறைமுதலோன் மெல்லடியைப் பணிந்தேற்றிக்
கைப்பட்ட படைவீரர் களத்திடைமுன் னிவன்காட்டும்
மொய்ப்பட்ட வலிகாட்ட மிக்கயலே மொழியுற்றான்.
 
செய்ப் பட்ட வானவரும் திற முனி சொல் கேட்டு உவந்து,
மெய்ப் பட்ட மறை முதலோன் மெல் அடியைப் பணிந்து ஏற்றி,
கைப் பட்ட படை வீரர் களத்திடை முன் இவன் காட்டும்
மொய்ப் பட்ட வலி காட்ட, மிக்கயலே மொழி உற்றான்:

     செம்மை வாய்ந்த வானவரும் திறம் வாய்ந்த சூசை முனிவன்
சொல்லைக் கேட்டு மகிழ்ந்து, மெய்யான வேதத்திற்கு முதல்வனாகிய
குழந்தை நாதனின் மெல்லிய அடியைப் பணிந்து போற்றினர்.
அப்பொழுது, கையில் படைக் கருவி தாங்கிய வீரர் செயலாற்றும்
போர்க்களத்தில் இவ்வாண்டவன் முற்காலத்தில் காட்டிய திரள் கொண்ட
வல்லமையை எடுத்துக் காட்டும் பொருட்டு, மிக்கயேல் என்ற வானவனே
மீண்டும் சொல்லத் தொடங்கினான்:

                    7
அலையீன்ற முத்தெனவீங் கயர்வுற்றோன் முன்னாளின்
மலையீன்ற விம்மணிப்பூம் புனலிடத்தும் மறைபகைத்த
கொலையீன்ற வேல்வல்லார் குழைந்தறவிந் நாட்டிடத்துங்
கலையீன்ற சொற்கடந்து காட்டியவை கேண்மினென்றான்.