பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்107

"அலை ஈன்ற முத்து என ஈங்கு அயர்வு உற்றோன், முன் நாளில்,
மலை ஈன்ற இம் மணிப் பூம் புனலிடத்தும், மறை பகைத்த
கொலை ஈன்ற வேல் வல்லார் குழைந்து அற, இந் நாட்டிடத்தும்
கலை ஈன்ற சொல் கடந்து காட்டியவை கேண்மின்" என்றான்:

     "கடல் பெற்றெடுத்த முத்துப் போல இங்கு அயர்வுற்றுக் காணும்
இவ்வாண்டவன், முற்காலத்தில் வேதத்தைப் பகைத்தவரும் கொலையை
விளைவித்த வேலில் வல்லவருமாகிய பகைவர் குழைந்து அழியுமாறு, மலை
ஈன்று தந்த மணிகள் நிறைந்த இவ்வழகிய ஆற்றிலும், இந் நாட்டிலும்,
கலைகள் வடித்துத் தந்த சொல்லையெல்லாம், கடந்த விதமாய்க் காட்டிய
வல்லமைகளை நான் சொல்லக் கேட்பாயாக" என்று, பின்வருமாறு
தொடர்ந்து சொன்னான் :

     கேண்மின் - 'கேளுங்கள்' என்று பன்மைப் பொருள் சுட்டும் 'மின்'
விகுதியை ஒருமைக்கும் உரியதாக்கியது முனிவர்கொண்ட புது மரபு. கடல்
பெற்ற முத்து தன் ஒளி புலப்படாது கடலுக்குள் அமைந்து கிடத்தல்போல்,
மனித உடல் கொண்ட ஆண்டவனும் தன் தெய்வ நலம் புலப்படாது
அவ்வுடலுக்குள் அமைந்து கிடந்து அயர்வுற்றான் என்பது கருத்து. இதற்கு,
"சிப்பியில் திரண்ட முத்துப்போலத் துணை இன்றிக் கன்னித் தாயிடத்து
உடலை எடுத்து மனிதனாய் அலைபட்டு, கடலில் அம்முத்து நின்று
அலைவதுபோல் இங்கே அலைந்து திரியும் இந்நாதன்" என்று பழைய
உரையாசிரியர் விரித்துத் தந்தபொருள் பொருந்துமேற் கொள்க.

                 எரிக்கோ வீழ்ச்சி

     - மா, - மா, - - காய், - மா, - மா, - - காய்

                    8
கல்லிற் றீட்டி வரைந்தமறை கடவுள் தந்து மலையிறங்கி
யெல்லிற் றீட்டி யொளிர்ந்தமுகத் தெழுமோ யிசன்செல்
                                      கதிசேர்ந்து
வில்லிற் றீட்டி யூனுமிழ்ந்த வேற்சோ சுவனக் குலத்தரசாய்
வல்லிற் றீட்டி வளர்தெய்வ மாட்சி காட்டு முருவானான்.