பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்108

கல்லில் தீட்டி வரைந்த மறை கடவுள் தந்து, மலை இறங்கி,
எல்லின் தீட்டி ஒளிர்ந்த முகத்து எழு மோயிசன், செல் கதி
                                         சேர்ந்து,
வில்லின் தீட்டி ஊன் உமிழ்ந்த வேல் சோசுவன் அக்குலத்து
                                         அரசு ஆய்,
வல்லின் தீட்டி வளர் தெய்வ மாட்சி காட்டும் உரு ஆனான்.

     "கற்பலகையில் தீட்டி எழுதிய வேதத்தைக் கடவுள் தனக்குத் தந்து,
அதனோடு மலையைவிட்டு இறங்கி, ஞாயிறு போல் தீட்டப்பெற்று ஒளிர்ந்த
முகத்தோடு தலைவனாக யூதரிடையே எழுந்து நின்ற மோயிசன், சென்று
சேரத்தக்க மோட்ச கதியை அடைந்தான். அதன் பின், ஒளியோடு தீட்டப்
பெற்றுப் பகைவர் ஊனை உமிழ்ந்த வேலைத் தாங்கிய சோசுவன், அக்
குலத்திற்கு அரசன் போன்று தலைவனாகி, வல்லமையால் தீட்டப் பெற்று
வளரும் கடவுள் மாட்சியை இவ்வுலகிற்கு எடுத்துக்காட்டும் உருவமாய்
விளங்கினான்.

     அருவப் பொருளாகிய கடவுளின் வல்லமையை உலகிற்குக் காட்டும்
உருவப் பொருளாக விளங்கினான் சோசுவன் என்பது கருத்து. மறை -
வேதம்; இங்கு வேத நெறியாகிய பத்துக் கட்டளைகளைக் குறித்தது.
அதனைக் கடவுள் மோயிசனுக்குத் தந்த செய்தி, 18-வது, சீனயி மலை
காண் படலம் காண்க. சோசுவன் வெற்றிச் செய்தி: ப. ஏ., ஜோசுவா
ஆகமம் காண்க.

     'அரசு' என்றாரேனும், அரசன் போன்ற தலைவன் என்றே கொள்க.
சவுலுக்கு முன் யூதர்களுக்கு அரசன் இல்லை.

                       9
கார்தா வசல மேற்பிறந்து கதிர்சால் தும்மு மணிவரன்றித்
தார்தா வென்னச் சூழ்தயங்கித் தண்டா தலரிற் றவழ்ந்துலவிச்
சீர்தா விந்நாட் டிடைப்பரந்து செல்வா யெல்லாந்
                                     திருச்செலத்துஞ்
சோர்தா னென்னு மிந்நதியைத் துன்னி யூத ரெய்தினரே.
 
"கார் தாவு அசல மேல் பிறந்து, கதிர் சால் தும்மு மணி வரன்றி,
தார் தாவு என்னச் சூழ் தயங்கி, தண் தாது அலரில் தவழ்ந்து உலவி,
சீர் தாவு இந் நாட்டிடைப் பரந்து, செல்வாய் எல்லாம் திருச் செலுத்தும்
சோர்தான் என்னும் இந் நதியைத்துன்னி யூதர் எய்தினரே.