"கருமேகங்கள்
தவழும் மலையின்மேல் பிறந்து, கதிரொளியை
மிகுதியாகப் பொழியும் மணிகளைக் கரையிற் கொழித்து, மாலை
தவழ்வதுபோல் மலையைச் சுற்றிலும் விளங்கி, குளிர்ந்த இதழுள்ள
மலர்களின் உள்ளே தவழ்ந்து நடந்து, சிறப்புக்களெல்லாம் பொருந்திய
இந்நாட்டில் பரந்து பாய்ந்து, தான் செல்லும் இடமெல்லாம் செல்வத்தைக்
கொண்டு செலுத்தும் சோர்தான் என்னும் இவ்வாற்றை யூதர் நெருங்கி
வந்தடைந்தனர்.
'அலர்' நீரின்
மேற்பரப்பில் பரந்து மூடிச் செல்லும் மலர் என்க.
10 |
தெண்ணந்
தண்ணீர் மேய்ந்துயர்ந்த செல்லே மின்னித்
திரண்டார்த்துக்
கண்ணங் குன்றத் துயர்நெற்றி களிப்பப் பொழிந்த வெள்ளமொடு
தண்ணங் கந்த மலர்முல்லைத் தடத்திற் பெருகி யந்நாளில்
வண்ணங் கொண்ணா டுவந்தோங்க வரைவற் றெழுகு மாநதியே. |
|
"தெண் அம் தண்
நீர் மேய்ந்து உயர்ந்த செல்லே மின்னித் திரண்டு
ஆர்த்து,
கண் அம் குன்றத்து உயர் நெற்றி களிப்பப் பொழிந்த வெள்ளமொடு,
தண் அம் கந்த மலர் முல்லைத் தடத்தில் பெருகி, அந்நாளில்,
வண்ணம் கொள் நாடு உவந்து ஓங்க, வரைவு அற்று ஒழுகும்
மாநதியே. |
"தெளிந்த அழகிய
குளிர்ந்த கடல் நீரைப் பருகி உயர்ந்தெழுந்த
மேகங்கள் மின்னித் திரண்டு முழங்கி, இடம் பரந்த அழகிய மலையின்
உயர்ந்த சிகரம் மகிழுமாறு பொழிந்த வெள்ளத்தோடு கூடி, குளிர்ந்த
அழகிய மணம் கொண்ட முல்லை நிலத்தில் வந்து பெருகி, அழகு
கொண்ட இந்நாடு மகிழ்ந்து செழுமையில் ஓங்குமாறு, அந்நாளில்
இப்பேராறு இடையறாமல் பாய்ந்தோடும்.
11 |
கரைமேற்
றிரண்ட யூதர்கொணர் கதிநூற் பேழை சேர்ந்தனகா
னிரைமேற் கீழ்நின் றனதிரைக ணெறிபோ யோட மேல்வருநீர்த்
திரைமேற் றிரைநின் றதிசயித்த சீர்போ லடுக்கி நின்றினிதாய்ப்
புரைமேற் களித்த யூதரெலாம் போயக் கரைசேர்ந் தெய்தினரே. |
|