பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்110

"கரை மேல் திரண்ட யூதர் கொணர், கதி நூல் பேழை சேர்ந்தனகால்,
நிரை மேல், கீழ் நின்றன திரைகள் நெறி போய் ஓட, மேல் வரு நீர்த்
திரை மேல் திரை நின்று, அதிசயித்த சீர் போல், அடுக்கி நின்று                                              இனிதாய்ப்
புரை மேல் களித்த யூதர் எலாம் போய் அக் கரை சேர்ந்து எய்தினரே.

     "அவ்வாற்றின் இக்கரை மேல் திரண்டு நின்ற யூதர் தம்மோடு
கொணர்ந்த மேற்கதிக்கு வழிகாட்டும் நூல் போன்ற கட்டளைப் பலகைகள்
அடங்கிய பேழை வந்து சேர்ந்தபோது, அவ்யூதர் அணியின் மேற்குப்
புறமாய், கீழ்நோக்கிச் சென்று கொண்டிருந்த நீர் அலைகள் தம் வழியே
தெற்கு முகமாய் ஓடிப் போகவும், மேலே வடக்கிலிருந்து வரும் நீரலையின்
மேல் நீரலை ஏறி நின்று, வியப்புற்று நோக்கிய தன்மைபோல், அடுக்கி
நிற்கவுமாக, ஒப்பற்ற விதமாய் மகிழ்ந்த யூதரெல்லாம் அவ் வெற்றிடம்
வழியாக இனிதே நடந்துபோய் அக்கரைச் சென்று சேர்ந்தனர்.

     சோர்தான் ஆறு வடக்கிலிருந்து தெற்காய் ஓடுதலாலும், யூதர்
கிழக்குக் கரையினின்று மேற்குக் கரைக்குச் செல்ல
வேண்டியிருந்தமையாலும், 'கீழ் நின்றன திரை' என்பதற்குப் பழைய
உரையாசிரியர். "அவருக்குக் கிழக்குள்ள ஆற்று நீரெல்லாம்" என்று
பொருள் கொண்டது பொருந்தாது. அவரே, மேல் வரு நீர்' என்பதற்கு,
"மேல் வரும் நீரோவென்னில்," எனப் பொருள் கொள்ளலும் காண்க.
முனிவர், 'கதி நூல் பேழை' என்றாரேனும், அதனுள் இருந்தவை பத்துக்
கட்டளைகள் தீட்டிய கற்பலகைகளே என்று தெளிக.

                       12
இவ்வா றவ்வா றவர்கடந்த வெல்வை யெவரு முள்வியப்பச்
செவ்வா றடிக டம்பொறிபோற் சிதறா தொதுங்கி நின்றதிரை
யொவ்வா மறையைத் தொழுந்தன்மைத் துவந்தொல் லெனவீழ்ந்
                                            துலகறிய
வவ்வா றுற்ற துரைத்தென்ன வதிர முழங்கி யோடினவே.