"இவ்வாறு அவ்
ஆறு அவர் கடந்த எல்வை, எவரும் உள் வியப்ப,
செவ் ஆறு அடிகள் தம் பொறி போல் சிதறாது ஒதுங்கி நின்ற திரை,
ஒவ்வா மறையைத் தொழும் தன்மைத்து, உவந்து ஒல்லென வீழ்ந்து,
உலகு
அறிய
அவ் ஆறு உற்றது உரைத்து என்ன, அதிர முழங்கி ஓடினவே. |
"இவ்வாறு அவ்யூதர்
அந்த ஆற்றைக் கடத்து முடித்த வேளையில்,
செவ்விய நெறியில் வாழும் முனிவரின் ஐம்பொறிகளைப் போல் சிதறாமல்
ஒதுங்கி நின்ற நீரலைகள், எல்லோரும் தம் உள்ளம் வியக்குமாறு, ஒப்பற்ற
வேதத்தை விழுந்து தொழும் தன்மை போல், மகிழ்ந்து ஒல்லென்ற
ஓசையோடு சாய்ந்து விழுந்து, அந்த ஆற்றுக்கு நேர்ந்ததை உலகமெல்லாம்
அறிய எடுத்துரைத்ததுபோல, அதிர்ந்து முழங்கி முன்போல் ஓடின.
13 |
அமிர்தம்
பாய்ந்து மதுப்பாய்ந்தா ரன்னம் பாய்ந்த வயல்
கடந்து
துமிர்தம் பாய்ந்து கயல் பாய்ந்து துள்ளுங் கமலத் தடநீக்கித்
திமிர்தம் பாய்ந்து நிழல் பாய்ந்த செழும்பூஞ் சோலை
புடைமருவ
நிமிர்தம் பாய்ந்து முகில்பாய்ந்த நேரார் வைகு நகர்கண்டார். |
|
"அமிர்தம் பாய்ந்து,
மது பாய்ந்து, ஆர் அன்னம் பாய்ந்த வயல்
கடந்து,
துமிர்தம் பாய்ந்து கயல் பாய்ந்து துள்ளும் கமலத் தடம் நீக்கி,
திமிர்தம் பாய்ந்து நிழல் பாய்ந்த செழும் பூஞ் சோலை புடை மருவ,
நிமிர்தம் பாய்ந்து முகில் பாய்ந்த நேரார் வைகும் நகர் கண்டார். |
"அடியில் நீர்
பாய்ந்து, மேலே மலர்களினின்று தேன் பாய்ந்து,
ஆரவாரிக்கும் அன்னங்கள் பாய்ந்து பறந்த வயல்களைக் கடந்து, நீர்த்
திவலைகள் பாயும் வண்ணம் கயல் மீன்கள் பாய்ந்து துள்ளும் தாமரைத்
தடாகங்களையும் கடந்து, பறவைகளின் ஒலி பாய்ந்து நிழல் பரந்த
செழுமையான பூஞ்சோலைகள் பக்கமெல்லாம் செறிந்து கிடக்க, நிமிர்ந்த
நிலை கொண்டு மேகத்தை நோக்கிப் பாய்ந்த மாளிகைகளோடு தம்
பகைவர் இருந்து வாழும் நகரத்தை அவ்யூதர் கண்டனர்.
|