'திமிர்தம்
பாய்ந்த' என்றதனால், ஒலிக்குக் காரணமான 'பறவைகள்',
'முகில் பாய்ந்த நகர்' என்றதனால், அதனை நோக்கிப் பாயும் 'மாளிகை'
வருவித்து உரைக்கப்பட்டன.
14 |
செல்லே வரையைத்
தழுவுதலோ செல்லைத் தாங்கும் வரைதானோ
வெல்லே ரெரிக்கோ வென்னுநக ரேந்துங் கன்னி யம்புரிசை
வல்லே வளர்வேல் யூதரெலா மகிழக் கண்டார்த் தம்புவிசை
யொல்லே வெல்லப் போயினபோ துரையுற் றறைந்தான் சோசுவனே. |
|
"சொல்லே வரையைத்
தழுவுதலோ, செல்லைத் தாங்கும் வரை தானோ,
எல் ஏர் எரிக்கோ என்னும் நகர் ஏந்தும் கன்னி அம் புரிசை,
வல்லே வளர் வேல் யூதர் எலாம் மகிழக் கண்டு ஆர்த்து, அம்பு விசை
ஒல்லே வெல்லப் போயின போது, உரை உற்று அறைந்தான் சோசுவனே: |
"மேகங்கள்
மலையைத் தழுவிய தோற்றமோ, மேகங்களைத் தாங்கி
நிற்கும் மலைதானோ என்று சொல்லத் தக்கவாறு, ஒளியோடு அழகிய
எரிக்கோ என்னும் நகரம் தாங்கி நின்ற அழியாத அழகிய மதிலை, தம்
வல்லமை வளர்வதற்குக் காரணமான வேலைத் தாங்கி நின்ற யூதரெல்லாம்
மகிழ்ச்சியோடு கண்டு முழங்கி. அம்பின் வேகம் போல் விரைவாக வெல்ல
முற்பட்டுப்போனபோது, சோசுவன் பேசத் தொடங்கிப் பின் வருமாறு
சொன்னான் :
15 |
செல்வேஞ்
செல்வ நகர்தகர்ப்பச் செல்லச் செல்லு மெல்லைசெலும்
வெல்வேம் வெல்லும் வல்லமையோ வீர வில்லின் மாரியினோ
டெல்வேல் வல்ல தல்லதென விறைவன் றான்றன் வலிகாட்டக்
கொல்வே லில்லா திந்நகரைக் குலையச் சிதைத்தல் காண்மினென்றான். |
|