பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்113

"சொல்வேம். செல்வ நகர் தகர்ப்ப, செல்லச் செல்லும் எல்லை செலும்,
வெல்வேம். வெல்லும் வல்லமையோ, வீர வில்லின் மாரியினோடு
எல் வேல் வல்லது அல்லது என, இறைவன் தான் தன் வலி காட்ட,
கொல் வேல் இல்லாது, இந் நகரைச் சிதைத்தல் காண்மின்!' என்றான்.

     "நாம் செல்வோம். நாம் இந்நகருக்குப் போகச் செல்லும் கால
எல்லையே, இச் செல்வ நகரைத் தகர்ப்பதற்குச் செல்லும். நாம் வெல்வோம்.
அவ்வாறு வெல்லும் வல்லமையோ, வீரம் வாய்ந்த வில்லின் மழையோடு
ஒளி பொருந்திய வேலினால் சாதிக்கக் கூடியதன்று என்று காட்டும்படியாக,
ஆண்டவன் தானேதன் வலிமையைக் காட்ட, கொல்லும் வேலின் துணை
இல்லாமல், இந்நகரைச் சிதைக்கும் திறத்தை நீங்களே பாருங்கள்!" என்றான்.

                     16
ஏறா ரொலிபோற் பற்பறையார்த் திறைவன் பணியால்
                                      மறைப்பேழை
வீறா மதில் சூழ் கொணர்ந்தொருசொல் விளம்பா வெல்வே
                                       லேந்திவிரைந்
தாறா வழல்பெய் யரியன்னா ராறு நாளைக் கொருகாலை
மாறா வரவே மருண்டொன்னார் மனமுட் பதைப்ப வியப்புற்றார்.
 
"ஏறு ஆர் ஒலி போல் பல் பறை ஆர்த்து, இறைவன் பணியால்,
                                             மறைப்பேழை
வீறு ஆம் மதில் சூழ் கொணர்ந்து, ஒரு சொல் விளம்பா, வெல்வேல்
                                             ஏந்தி விரைந்து,
ஆறா அழல் பெய் அரி அன்னார், ஆறு நாளைக்கு ஒரு காலை
மாறா வரவே, மகுண்டு ஒன்னார், மனம் உள் பதைப்ப வியப்பு உற்றார்

     "ஆண்டவன் சோசுவன் மூலமாகத் தந்த கட்டளைப்படியே, ஆறாத
நெருப்பைப் பொழியும் சிங்கம் போன்ற யூதர், இடி முழங்கும் ஒலிபோல்
பல பறைகளைக் கொட்டி முழக்கி, வேதக் கட்டளை அடங்கிய பேழையைப்
பகைவருக்குப் பெருமை தந்து நின்ற அம்மதிலைச் சூழச்