பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்114

சுமந்து கொணர்ந்து, ஒரு வார்த்தையும் பேசாமல், வெல்லும் வேலைக்
கையில் ஏந்தி விரைந்து நடந்து, ஆறு நாட்களாக நாளுக்கு ஒரு தடவை
தவறாமல் வரவே, பகைவர் மயங்கி, உள்ளே மனம் பதைத்து வியப்பிற்கு
ஆளாகினர்.


                  17
"கோளுற் றொளிர்வான் கோனிவற்றைக் காணக்
                            குணக்கி லெழவேழா
நாளுற் றம்பிற் கடிதோடி நகரேழ் முறையின்
                               றிடைவளைத்து
வாளுற் றெவரும் வானதிர வாய்விட் டார்த்து
                               வருகவெனத்
தோளுற் றுயர்குன் றியல்குன்றுஞ் சோசு வன்றான்
                               பணித்திட்டான்.
 
"கொள் உற்று ஒளிர் வான் கோன் இவற்றைக் காணக் குணக்கில் எழ,
                                             ஏழாம்
நாள் உற்று, 'அம்பின் கடிது ஓடி, நகர் ஏழ் முறை இன்று இடை
                                             வளைத்து,
வாள் உற்று, எவரும் வான் அதிர வாய் விட்டு ஆர்த்து வருக,' என,
தோள் உற்று உயர் குன்று இயல் குன்றும் சோசுவன் தான்,
                                             பணித்திட்டான்,

     "கிரகங்கள் நின்று ஒளி செய்யும் வான மண்டலத்திற்கு அரசனாகிய
கதிரவன் இவ்வதிசயங்களைக் காணக் கிழக்கில் உதிக்க, ஏழாம் நாள்
வந்து சேர்ந்தபோது, தன் தோளுக்கு நிகரென்று வந்து உயர்ந்த குன்றும்
பெருமை குன்றச் செய்யும் சோசுவன், 'வாளைக் கையில் ஏந்திக் கொண்டு,
அம்பைக் காட்டிலும் விரைந்து ஓடி, இன்று இந்நகரை ஏழு தடவை சுற்றி
வளைத்து, எல்லோரும் வானம் அதிருமாறு வாய்விட்டு முழங்கி வாருங்கள்'
என்று கட்டளையிட்டான்.

                        18
ஆர்த்தார் திரண்டார் முடுகுகின்றா ரன்றே யேழா முறைவரக்கா
ரீர்த்தா ருருமொத் தொலித்ததிர விடைவிட்டரணுந்
தகர்ந்திடிந்தே
பார்த்தா ரொன்னார் பதைத்தஞ்சப் பாய்ந்தார் யூதர்
வாள்பசியைத்
தீர்த்தார் துமித்தார் பகைவெள்ளஞ் சிறந்த வெற்றி
நலங்கொண்டார்.