பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்119

            26
ஒன்னாரினு ரத்திலு லாவியுணூன்
மின்னோடுமி ழுங்கத வேடலடலோ
யுன்னோடுற வாடின மென்றுளமற்
றந்நாடரெ லாம்பகை யாடினரால்.
 
"ஒன்னாரின் உரத்தில் உலாவி உண் ஊன்
மின்னோடு உமிழும் கதவேல் அடலோய்,
உன்னோடு உறவாடினம் என்று, உள மற்று
அந் நாடர் எலாம் பகை ஆடினர் ஆல்.

     "பகைவரின் மார்பில் உலாவி உண்ணும் ஊனை மின்னலொளியோடு
உமிழும் சினந்த வேலைத் தாங்கிய வல்லவனே, யாம் உன்னோடு
உறவாடினோம் என்ற காரணத்தால், மற்றுள்ள நாட்டவரெல்லாம் எம்மோடு
பகை கொண்டுள்ளனர்.

             27
மஞ்செஞ்சுக மாமுர சார்ப்பவரா
நஞ்செஞ்சுக வெய்படை ஞாஞ்சிலொடு
நெஞ்சஞ்சுக நீணில மெஞ்சுகவந்
தஞ்சஞ்சில மன்னர டுத்தனரால்.
 
"மஞ்சு எஞ்சுக மா முரசு ஆர்ப்ப, அரா
நஞ்சு எஞ்சுக எய் படை ஞாஞ்சிலொடு
நெஞ்சு அஞ்சுக, நீண் நிலம் அஞ்சுக வந்து,
அஞ்சு அஞ்சில மன்னர், அடுத்தனர் ஆல்.

     "உனக்கு அஞ்சாத ஐந்து அரசர், மழை மேகமும் குறைபடுமாறு தம்
பெரிய முரசுகள் முழங்க, பாம்பின் நஞ்சும் ஈடாகாத எய்யும் படையாகிய
தம் வில்லுக்கு எம் மதிலோடு நெஞ்சும் அஞ்சுமாறு, நீண்ட இவ்வுலகமே
அஞ்சுமாறு வந்து அடுத்தனர்.

     எஞ்சுக - எஞ்ச: வினையெச்சத்தின் இடையே பகுதியோடு குகரச்
சாரியை பெற்று, எஞ்சு + கு + அ - எஞ்சுக என நின்றது. மஞ்சு - மழை
மேகம்; இங்கு அம் மேகத்தில் தோன்றும் இடிக்கு ஆகுபெயர். அஞ்சு -
ஐந்து என்பதன் முழுப் போலி.