|
"ஏர் ஆடிய ஏரிம
நாட்டு இறையோன்
பாரான் எனும் நாமன் அகல் படியின்
வேர் ஆடிய மூ இலை வேலுடன் ஓர்
சீர் ஆடிய தேர்மிசை சென்றனன் ஆல். |
"அழகு வாய்ந்த
ஏரிம நாட்டு மன்னனாய்ப் பாரான் என்னும் பெயர்
கொண்டவன், பரந்த பூமியில் வேர் விட்டு வளர்ந்தது போன்ற மூன்று
இலை வடிவம் கொண்ட வேலுடன் ஒரு சிறப்புப் பொருந்திய தேரில் ஏறி
வந்துள்ளான்.
| 31 |
கணையோவளி
யோகதிர்க் கார்மினலோ
துணையோர்துர கத்துயர் வாள்சுழலப்
பனையோம்பயி லக்கின பாழியினா
னிணையோதவிர் யாப்பிய னெய்தினனால். |
| |
"கணையோ வளியோ
கதிர்க்கார் மினலோ
துணை ஒர் துரகத்து, உயர் வாள் சுழல,
பணை ஓம்பு அயிலக்கின பாழியினான்,
இணையோ தவிர் யாப்பியன், எய்தினன் ஆல். |
"வயல்களைப்
பேணி வாழம் அயிலக்கின நாட்டு மன்னனாய்,
தனக்கு யாரும் நிகரில்லாத யாப்பியன் என்பவன், அம்போ காற்றோ ஒளி
பொருந்திய கார்மேகத்து மின்னலோ ஒப்பென்னத்தக்க ஒரு குதிரை மீது,
உயர்ந்த வாளைச் சுழற்றிய வண்ணமாய் வந்துள்ளான்.
| 32 |
வாசத்தலர்
பூம்வய லேகிலநற்
றேசத்தர சாய்ச்சிகி வாகையனாய்ப்
பாசத்திணை பான்மதி யாழியனாய்ப்
பூசத்தியி றாபிர்பொ லிந்தனனால். |
| |
"வாசத்து அலர்
பூம் வயல் ஏகில நல்
தேசத்து அரசாய், சிகி வாகையனாய்,
பாசத்து இணை பால் மதி ஆழியனாய்,
பூசத்தியில் தாபிர் பொலிந்தனன் ஆல். |
|