|
"மணத்தோடு
மலரும் பூக்கள் நிறைந்த வயல்களைக் கொண்ட நல்ல
ஏகில நாட்டு மன்னனாய், நெருப்புக் கொடியை உடையவனாய், கூற்றுவனது
பாசக் கயிற்றுக்கு ஒப்பாகவும், வெண்மையான மதி வடிவாகவும் அமைந்த
சக்கராயுதத்தைத் தாங்கியவனாய், போர்முகத்து வீர யானையின் மேலாய்த்
தாபிர் என்பவனும் பொலிவோடு வந்துள்ளான்.
| 33 |
இன்னாருமெ
வேயரு மெத்தையரும்
பொன்னாடமு றேயரும் வண்புகழ்சேர்
நன்னாடெபு சேயரு நச் சயில்வேன்
மன்னார்பிரெ சேயரு மண்டினரே. |
| |
"இன்னாரும்,
வேயரும், எந்தையரும்,
பொன் நாடு அமு றேயரும், வண் புகழ் சேர்
நல் நாடு எபுசேயரும், நஞ்சு அயில் வேல்
மன் ஆர் பிரெசேயரும் மண்டினரே. |
"இவ்வைந்து
மன்னரோடும், எவேய நாட்டாரும், எத்தைய நாட்டாரும்,
பொன் நிறைந்த அமுறேய நாட்டாரும், வளமான புகழ் சேர்ந்த நல்ல
எபுசேய நாட்டாரும், நஞ்சுள்ள கூர்மையான வேலை நிலையாகக் கொண்டு
நிறைந்த பிரெகேய நாட்டாரும் கூடி வந்து குவிந்துள்ளனர்.
நஞ்சு + அயில்
- நச்சயில்
| 34 |
மடையைக்கடல்
வாரிதி றந்ததெனப்
புடையிற்புவி யாவும்பு ழக்கமற
விடையெக்கணு முள்ளவி யாவருமே
படையுற்றெமை யின்றுப கைத்தனரால். |
| |
"மடையைக் கடல்
வாரி திறந்தது என,
புடையில் புவி யாவும் புழக்கம் உற,
இடை எக்கணும் உள்ள யாவருமே,
படை உற்று எமை இன்று பகைத்தனர் ஆல். |
|