|
"கடல் வெள்ளத்தை
மடை திறந்து விட்டாற்போல, எமக்கும்
தமக்கும் இடையில் எவ்விடத்துமுள்ள பகைவர் யாவரும், எம்மைச்
சுற்றிலும் பூமி முழுவதும் தம் நடமாட்டம் பொருந்தப் படை கொண்டு,
எம்மை இன்று பகைத்து வந்துள்ளனர்.
| 35 |
மலைநேர்கரி
யும்வளி நேர்பரியும்
முலைநேர்தனு வும்முறை நேர்கணையுஞ்
சிலைநேருர முந்திளை சேனைகளே
நிலைநேரில நேமிநி றைந்தனவே. |
| |
"மலை நேர் கரியும்,
வளி நேர் பரியும்,
முலை நேர் தனுவும், உரை நேர் கணையும்,
சிலை நேர் உரமும் திளை சேனைகளே
நிலை நேர் இல நேமி நிறைந்தனவே. |
"மலை போன்ற
யானையும், காற்றுப் போன்ற குதிரையும், முறை
போன்ற வில்லும், மழைத்துளி போன்ற அம்பும், கல் போன்ற நெஞ்சும்
பொருந்திய அப்பகைவர் தம் சேனைகளே நிலை கொள்ளாமலும் நிகர்
இல்லாமலும் பூமியெங்கும் நிறைந்துள்ளன.
| 36 |
போர்கீறிய
வெய்ப்புண ரித்திரையோ
நீர்கீறிய நீண்கல மோசிறகாற்
கார்கீறிய கற்றிகி ரிக்குலமோ
பார்கீறிய காற்படர் தேர்த்திரளே. |
| |
"போர் கீறிய
வெய்ப் புணரித் திரையோ,
நீர் கீறிய நீண் கலமோ, சிறகால்
கார் கீறிய கல் திகிரிக் குலமோ,
பார் கீறிய கால் படர் தேர்த் திரளே? |
"பூமியைக் கிழித்த
தன்மையாய்ச் சக்கரத்தால் இயங்கும் தேர்களின்
கூட்டம், போர்க் களத்தைக் கிழித்து வந்த சினந்த கடலின் திரை
தானோ? கடலைக் கிழித்துச் சென்ற கப்பல் தானோ? சிறகால் பறந்து கரு
மேகத்தைக் கிழித்துச் சென்ற கல்மலைக் கூட்டத்தானோ?
|