பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்124

           37
வளியோகட லோமழை யோவுருமோ
விளியோடதிர் கூற்றின மோவெவையோ
தெளியோமுயி ருண்டுசி னந்ததிருங்
களியோடுக டத்தக ரித்திரளே.
 
"வளியோ, கடலோ, மழையோ, உருமோ,
விளியோடு அதிர் கூற்று இனமோ, எவையோ,
தெளியோம், உயிர் உண்டு சினந்து அதிரும்
களி ஓடு கடந்த கரித் திரளே"

     "எதிர்ப்பட்டார் உயிரை உண்டு சினந்து முழங்கும் களிப்பால்
பாய்ந்து ஓடும் மதங்கொண்ட யானையின் கூட்டம், காற்றோ? கடலோ?
கருமேகமோ? இடியோ? விளியெறிந்து முழங்கும் கூற்றுவனின்
பரிவாரமோ? வேறு எவையோ? தெளிய ஒன்றும் அறியோம்!

     விளியெறிதல் - சீழ்க்கையடித்தல்.

            38
மேன்மன்னிய வீரியர் வில்லிலுகுங்
கோன்முன்னின கொல்லுகு ளம்பின மேல்
வான்மின்னென வொல்கின வாவினபோர்ப்
பான்மன்மன முற்றப ரித்திரளே.
 
"மேல் மன்னிய வீரியர் வில்லில் உகும்
கோல் முன்னின, கொல்லு குளம்பின, மேல்
வான் மின் என ஒல்கின, வாவின, போர்ப்
பால் மன் மனம் உற்ற பரித்திரளே.

     "போரினிடத்துப் பின் வாங்காது நிலைபெறும் மனவுறுதி கொண்ட
குதிரைகளின் கூட்டம், தம் மேல் அமர்ந்திருந்த வீரர் தம் வில்லினின்று
பாய்ந்து சொரியும் அம்புகளையும் வேகத்தால் முந்தின; பகைவரை
மிதித்துக் கொல்லும் குளம்புகளை உடையன; மேலுள்ள வானத்து
மின்னலைப் போல் ஒடுங்கிச் சுழன்றன; தாவிப் பாய்ந்தன.