பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்126

                    சோசுவன் படையெழுச்சி

     - விளம், - மா, தேமா, - விளம், - மா, தேமா

                   41
ஊன்முகந் தழன்ற வேலோ னோர்நகை சினந்து கொட்டித்
தேன்முகந் தந்து கொல்லுந் தீவினைப் பகையொன் றன்றி
வேன்முகந் தந்த வெம்போர் வெருவவோ விரங்கி நாதன்
ளுன்முகந் தந்த காலை சயநமக் கரிதோ வென்றான்
 
"ஊன் முகந்து அழன்ற வேலோன், ஓர் நகை சினந்து கொட்டி
'தேன் முகம் தந்து கொல்லும் தீவினைப் பகை ஒன்று அன்றி,
வேல் முகம் தந்த வெம் போர் வெருவவோ? இரங்கி நாதன்
தான் முகம் தந்த காலை, சயம் நமக்கு அரிதோ?' என்றான்.

     "பகைவர் ஊனை முகந்து நெருப்பொளி கக்கிய வேலைத் தாங்கிய
சோசுவன், அது கேட்டுச் சினந்து ஓர் ஏளன நகைப்பை உதிர்த்து, 'தேனை
வெளியே காட்டி உள்ளே நஞ்சாய் இருந்து கொல்லும் பாவச் செயலாகிய
பகை ஒன்றுக்கே அஞ்சுவதல்லாமல், வேலின் முகத்து அமைந்த கொடிய
போருக்கு அஞ்சுவதோ? ஆண்டவன் தானே நம்மீது இரங்கித் தன்
திருமுகத்து அருளைத் தந்த விடத்து, வெற்றி நமக்கு அரியதோ?' என்றான்.

                   42
கூற்றெனச் சினந்தங் கின்ன கூற்றினை முடியா முன்ன
ரேற்றினத் துடன்ற தானை யெழுகவென் துயர்தே ரேறிக்
காற்றெனப் பறந்து ஞாலங் கலக்குறீஇக் கூச்ச செந்தீ
யூற்றெனச் சுடரைப் பில்கி யொளிர்ப்டை படர்ந்த தன்றே.
 
"கூற்று எனச் சினந்து அங்கு இன்ன கூற்றினை முடியா முன்னர்,
'ஏற்று இனத்து உடன்ற தானை எழுக!' என்று, உயர் தேர் ஏறிக்
காற்று எனப் பறந்து, ஞாலம் கலக்கு உறீஇக் கூச, செந்தீ
ஊற்று எனச் சுடரைப் பில்கி ஒளிர் படை, படர்ந்தது அன்றே.