|
"கூற்றுவன் போலச்
சோசுவன் சினந்து, இந்தப் பேச்சை
முடிப்பதற்கு முன்னே, 'மாறுபாடு கொண்ட நம் சேனை ஆண் சிங்கக்
கூட்டம் போல் போருக்கு எழுக!' என்று கூறி, தான் ஓர் உயர்ந்த தேரில்
ஏறிக் காற்றுப்போல் பறந்து போகவும், செந்நிற நெருப்பைக் கக்கும்
ஊற்றுப் போலக் கதிரைச் சிதறி ஒளிரும் படையும், உலகமே கலக்கமுற்றுக்
கூசுமாறு அத்திசை நோக்கிச் சென்றது.
'ஒளிர் படை'
என்றது, அணிந்த அணிகளாலும் தாங்கிய
ஆயுதங்களாலும் ஒளிரும் படை என்று கொள்க. 'அன்றே' அசை நிலை.
| 43 |
காலென விசையிற்
றேர்கள் காலொடு பறந்து செல்லக்
கோலெனப் பரிகள் செல்வக் குளிறிவே மடிச்சூன் மேகஞ்
சாலெனக் கரிகள் செல்லச் சமர்ப்புலி வெள்ள மொய்த்த
பாலெனப் பதாதி செல்லப் பகைவர்வெம் படையைக் கண்டார். |
| |
கால் என விசையில்
தேர்கள் காலொடு பறந்து செல்ல,
கோல் எனப் பரிகள் செல்ல, குளிறி வேம் இடிச்சூல் மேகஞ்
சால் எனக் கரிகள் செல்ல, சமர்ப் புலி வெள்ளம் மொய்த்த
பால் எனப் பதாதி செல்ல, பகைவர் வெம் படையைக் கண்டார். |
"தேர்கள் காற்றுப்
போன்ற வேகத்தில் சக்கரத்தோடு பறந்தாற்
போலச் செல்லவும், குதிரைகள் அம்பு போல் பாய்ந்து செல்லவும்,
முழங்கி எரிக்கும் இடியைச் சூலாகக் கொண்ட மேகம் போலும்
என்னுமாறு யானைகள் செல்லவும், போருக்கு ஏற்ற புலிகளின் கூட்டம்
மொய்த்த தன்மை போலும் என்னுமாறு காலாட்படை செல்லவுமாகச்
சோசுவன் படை வீரர் சென்று, பகைவரின் கொடும் படையைத் தம்
எதிரே கண்டனர்.
| 44 |
"கட்புல னழலைத்
தும்மக் கதத்தெதிர் கடலைக் கண்டா
னுட்புல னழற்றுஞ் சீற்ற மொடுக்கிய சீல முள்ளி
மட்புலன் மொய்த்த வாரி மறித்தெனப் படையைப் போக்கா
புட்புலன் றேய்வே லாபன் புணர்கவென் றறைந்தான்
வல்லோன். |
|