பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்128

"கண் புலன் அழலைத் தும்மக் கதத்து, எதிர் கடலைக் கண்டான்;
உள் புலன் அழற்றும் சீற்றம் ஒடுக்கிய சீலம் உள்ளி,
மண் புலன் மொய்த்த வாரி மறித்து என, படையைப் போக்கா,
'புண் புலன் தேய் வேல் ஆபன் புணர்க!' என்று அறைந்தான்,                                            வல்லோன் :

     "வல்லவனாகிய சோசுவன், தன் கண்ணாகிய பொறி நெருப்பைக்
கக்கக் கொண்ட சினத்தோடு, எதிரே நின்ற பகைவர் படைக்
கடலைக்கண்டான். தன் உள்ளமாகிய புலனைக் கொதிப்பூட்டும் சீற்றத்தை
ஒடுங்கச் செய்த அறவுணர்வைக் கருதி, மண்ணிடமெல்லாம் பரந்த
வெள்ளத்தை மறித்து நிறுத்தினாற் போல, தன் படையை அப்பகைவர் மீது
போகவிடாமல், 'பகைவரின் புண்ணாகிய இடத்திற் பொருந்தித் தேய்ந்த
வேலைக் கொண்டுள்ள ஆபன் இங்கு வருவானாக!' என்று அழைத்து,
அவனுக்குப் பின்வருமாறு கூறினான்:

                   45
ஐவரு மிடைத்தூ தேகி யனைத்தையும் பொதுவற்றாளு
மெய்வருஞ் சுருதி நாதன் விழைந்தடைக் கலம்வந் தாரைக்
கைவரும் படையின் சால்பிற் கலக்குறீஇப் பகைத்த தென்னோ
மொய்வரும் பகையி னூங்கு முதலவன் பகைதீ தென்பாய்.
 
"ஐவரும் இடைத் தூது ஏகி, அனைத்தையும் பொது அற்று ஆளும்
மெய் வரும் சுருதி நாதன் விழைந்து அடைக்கலம் வந்தாரை,
கை வரும் படையின் சால்பில் கலக்கு உறீஇப் பகைத்தது என்னோ?
மொய் வரும் பகையின் ஊங்கு முதலவன் பகை தீது, என்பாய்.

     "அவ்வைந்து மன்னரிடத்தும் நீ தூதுவனாகச் சென்று, பொதுவென்பது
இல்லாமல் அனைத்தையும் ஆளும் மெய்யான வேத நாதனாகிய
ஆண்டவனையே தொழ விரும்பி எம்மிடம் அடைக்கலம் புகுந்த காபனரை,
உம் கையில் பொருந்திய படையின் மிகுதியால் கலக்கமடையச் செய்து
பகைத்தது ஏனோ? போருக்கு வரும் இவ்வுலகத்துப் பகையைக் காட்டிலும்