|
யாவற்றிற்கும் முதல்வனாகிய
ஆண்டவனின் பகை தீயது, என்று எடுத்துச்
சொல்வாய்.
'ஐவருமிடை'
என்பதனை, 'ஐவரிடையும்' எனப் பிரித்துக் கூட்டுக.
| 46 |
பார்பெற
வாசை யானும் பானுமுன் பனியி னீங்குஞ்
சீர்பெற வாசை யானுஞ் செகுத்துயிர் வித்திக் கொள்ளும்
பேர்பெற வாசை யானும் பிறர்க்கியான் செருப்போர் செய்யேன்
போர்பெற நாதன் வேண்டிப் பொறுக்கவுஞ் செய்யே னென்பாய். |
| |
"பார் பெற ஆசை
யானும், பானு முன் பனியின் நீங்கும்
சீர் பெற ஆசையானும், செகுத்து உயிர் வித்திக் கொள்ளும்
பேர் பெற ஆசையானும், பிறர்க்கு, யான் செருப் போர் செய்யேன்;
போர் பெற, நாதன் வேண்டி, பொறுக்கவும் செய்யேன் என்பாய். |
"வேறு எவர்
பொருட்டாகவும், பிறர் மண்ணைக் கவர்ந்து பெற
ஆசையாலும், பகலவன் முன் பனி போல் விரைந்து மறையும் செல்வத்தைப்
பெற ஆசையாலும், பகைவர் உயிரைக் கொன்று விதைத்து விளைச்சலாகக்
கொள்ளும் புகழைப் பெற ஆசையாலும் நான் கொடும் போர் செய்ய
முற்படமாட்டேன், ஆண்டவனுக்காக வேண்டிப் போர் செய்ய
வேண்டுமாயின், தாமதிக்கவும் மாட்டேன் என்றும் எடுத்துச் சொல்வாய்.
'செரு' என்பதே
போராக, மீண்டும் 'போர்' என்றது, அதன் கொடுமை
குறிக்க வந்த ஒரு பொருட் பன்மொழி. பிறர்க்கு + யான் - 'பிறர்க்கியான்'
என, யகரம் வரக் குற்றுகரம் இகரமாய்த் திரிந்தது.
| 47 |
ஒருப்பட வுறவு நன்றென் றுடன்றுதாஞ் செருக்குற் றின்றே
செருப்பட வேண்டி னின்றே செருவரந் தருவ லென்பாய்
மருப்பட மலர்ந்த தாரோய் மருட்படா தறைதி யென்றா
னருப்பட வெய்ய வாப னிருபனைத் தொழுது போனான், |
|