பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்130

"ஒருப் பட உறவு நன்று என்று, உடன்று தாம் செருக்கு உற்று,
                                             இன்றே
செருப்பட வேண்டின், இன்றே செரு வரம் தருவல் என்பாய்.
மருப் பட மலர்ந்த தாரோய், மருள் படாது அறைதி' என்றான்.
நெருப்பு அட வெய்ய ஆபன், நிருபனைத் தொழுது போனான்.

     "ஒன்றுபடுமாறு எம்மோடு உறவு கொள்ளுதலே நன்று என்று
முதற்கண் கூறி, தாம் செருக்குக் கொண்டு மாறுபட்டு, இன்றே போருக்கு
உட்பட விரும்பினால், இன்றே போர் வரம் தருவேன் என்றும் கூறுவாய்,
மணம் கொண்டு மலர்ந்த மாலை அணிந்தவனே, இவையெல்லாம்
மயக்கங்கொள்ளாது எடுத்துரைப்பாய்" என்றான் சோசுவன். நெருப்பையும்
லெல்லத் தக்க சீற்றமுள்ள ஆபன், அரசனைப் போன்ற தலைவனாகிய
சோசுவனைத் தொழுது, தூதாகப் போனான்.

                       48
வின்முகத் தம்பிற் சென்று வேந்தரைந் தினறஞ்சிச் சொல்வான்
சொன்முகத் தடங்காச் சீர்த்திச் சோசுவன் றூதென் றுற்றேன்
வன்முகத் தொவ்வா நாதன் வணங்குகா பனரைச் சீய்க்கச்
சென்முகத் துறையின் வைவேற் செருப்படை மிடைந்த                                         தென்னோ;
 
"வில் முகத்து அம்பின் சென்று, வேந்தர் ஐந்து இறைஞ்சி, சொல்வான்
'சொல் முகத்து அடங்காச் சீர்த்திச் சோசுவன் தூது என்று உற்றேன்;
வன்முகத்து ஒவ்வா நாதன் வணங்கு காபனரைச் சீய்க்க,
செல்முகத்து உறையின் வை வேல் செருப் படை மிடைந்தது என்னோ?

     "வில்லினின்று தெறித்த அம்பு போல் ஆபன் விரைந்து சென்று,
மன்னர் ஐவரையும், வணங்கி, பின் வருமாறு சொல்வான்: 'சொல்லுக்கு
அடங்காத சிறப்பு வாய்ந்த சோசுவனின் தூதுவனாக நான் வந்துள்ளேன்;
வல்லமையில் ஒப்பற்ற ஆண்டவனை வணங்கும் காபனரை அழிக்கும்
பொருட்டு, மேகத்தில் அமைந்துள்ள மழைத் துளிக்கு ஒப்பாக, கூர்மையான
வேலைத் தாங்கிய போர்ப் படை இவ்வாறு திரண்டு நிற்பது ஏனோ?