|
| 49 |
மண்முழு தன்றி
வானும் வணங்குமொப் பெதிரீறின்றி
யெண்முழு திழந்த சீலத் திறைவனைத் தொழுதல் தீதோ
வுண்முழு தறிவு மாழ்க வுடற்றலே வேண்டா வென்றான்
புண்முழு தேற்றும் வேலோன் பொருநருஞ் சினந்து நக்கார். |
| |
"'மண் முழுது அன்றி
வானும் வணங்கும் ஒப்பு எதிர் ஈறு இன்றி
எண் முழுது இழந்த சீலத்து இறைவனைத்தொழுதல் தீதோ?
உள் முழுது அறிவு மாழ்க உடற்றலே வேண்டா' என்றான்,
புள் முழுது ஏற்றும் வேலோன் பொருநரும் சினந்து நக்கார். |
"'இம் மண்ணுலகம்
முழுவதுமேயன்றி வானுலகமும் வணங்குபவனாய்,
தனக்கு ஒப்பும் எதிரும் முடிவும் இன்றி, எண்ணெல்லாம் கடந்த உயர்குணங்
கொண்ட ஆண்டவனைத் தொழுதல் ஒரு தீய செயலோ? உள்ளத்தின்
அறிவு முற்றிலும் மயங்கிய தன்மையாய் அக்காபனரோடு போரிடுதல்
வேண்டாம்' என்று, பறவைகளெல்லாம் போற்றும் வேலைத் தாங்கிய ஆபன்
கூறினான். மன்னர் ஐவரும் அது கேட்டுச் சினந்து அவனை நகைத்தனர்.
'பறவைகள் போற்றுதல்'
அவன் வேலால் பகைவர் மாய, அதனால்
தமக்குக் கிடைக்கும் இரையைக் கருதியது.
| 50 |
வேற்றலா
தவரு நீரும் விரும்பி யொன் றாய போழ்தில்
மாற்றலா ரெமக்கென் றன்ன மன்னவ ருரைப்ப மீட்டுங்
கூற்றலா திணையா வேலான் கூறுவான் படையின் வெள்ளம்
போற்றலா லுளத்தி லேமம் பொங்குபு மருளல் வேண்டா. |
| |
"'வேற்று அலாது,
அவரும் நீரும் விரும்பி ஒன்று ஆய போழ்தில்,
மாற்றலார் எமக்கு', என்று, அன்ன மன்னவர் உரைப்ப, மீட்டும்,
கூற்று அலாது இணையா வேலான், கூறுவான்; 'படையின் வெள்ளம்
போற்றலால், உளத்தில் ஏமம் பொங்குபு மருளல் வேண்டா. |
|