|
| 54 |
போரிடத்
தஞ்சித் தூது புகலவோ வந்தே னொன்றாய்ப்
பாரிடத் தெதிரா நாதற் பழித்தபோ தின்றே யிவ்வேற்
சீரிடத் துரிமை சொல்வேன் செருப்பட வம்மி னென்னக்
காரிடத் தசனி கூசக் கதத்திலார்த் தாபன் மீண்டான். |
| |
"'போரிடத்து
அஞ்சித் தூது புகலவோ வந்தேன்? ஒன்றாய்ப்
பாரிடத்து எதிரா நாதற் பழித்தபோது, இன்றே இவ் வேல்
சீரிடத்து உரிமை சொல்வேன். செருப் பட வம்மின்' என்ன,
காரிடத்து அசனி கூசக் கதத்தில் ஆர்த்து, ஆபன், மீண்டான். |
"அது கேட்ட
ஆபன், 'நான் போர்கக்ளத்திற்கு அஞ்சித் தூது
சொல்லவோ வந்தேன்? இவ்வுலகில் ஒன்றாய்த் தனக்கு எதிரில்லாத
ஆண்டவனை நீர் பழித்தபோதே, இவ்வேலின் சிறப்பைக் கொண்டு
இன்றே அவ்வாண்டவனின் தனி உரிமையைச் சொல்லிக்காட்டுவேன்.
போருக்கு உட்பட வாருங்கள்" என்று, கருமேகத்திலுள்ள இடியும்
கூசுமாறு சினத்தோடு முழங்கி, மீண்டு சென்றான்.
| 55 |
சுளிமுகத்
தனைத்துங் கேட்ட சோசுவ னுருமிற் சீறி
வெளிமுகத் தமலன் சொல்லும் வெல்லுவாய் வென்றென்
னாண்மை
தெளிமுகத் தெவர்க்குந் தோன்றத் தெளிக்குவா யென்னக்
கேட்டு
வளிமுகத் தழலிற் பொங்கி வயப்படை யெழுக வென்றான். |
| |
"சுளி முகத்து
அனைத்தும் கேட்ட சோசுவன் உருமின் சீறி,
வெளி முகத்து அமலன் சொல்லும், 'வெல்லுவாய், வென்று, என்
ஆண்மை
தெளி முகத்து எவர்க்கும் தோன்றத் தெளிக்குவாய்' என்னக் கேட்டு,
வளி முகத்து அழலின் பொங்கி, 'வயப் படை எழுக!' என்றான். |
"ஆபன் சொல்லிய
அனைத்தும் சினந்த முகத்தோடு கேட்ட
சோசுவன் இடிபோல் சீறி நிற்கையில், வான வெளியில் எழுந்த ஆண்டவன்
வாக்கும், 'நீ இப்போரில் வெல்லுவாய்; வென்று, என் ஆண்மை தெளிவான
விதமாய் யாவர்க்கும் தோன்றுமாறு தெளிவிப்பாய்' என்று அமையக் கேட்டு,
காற்றின் முன் நெருப்புப் போலப் பொங்கி எழுந்து, 'நம் வலிமை வாய்ந்த
படை போருக்கு எழுவதாக!' என்றான்.
|