|
| 56 |
காரின்மேன்
முழங்க யானை கடலின்மேன் முழங்கத் திண்டேர்
தேரின்மேன் முழங்க மன்னர் திசைகள்மேன் முழங்கப் பம்பை
போரின்மேன் முழங்கப் பாய்மா புரவிமேன் முழங்க வீரர்
பாரின்மேன் முழங்க யாவும் பகைவர்மேன் முழங்கி மொய்த்தார், |
| |
"காரின் மேல்
முழங்க யானை, கடலின் மேல் முழங்கத் திண் தேர்,
தேரின் மேல் முழங்க மன்னர், திசைகள் மேல் முழங்கப் பம்பை,
போரின் மேல் முழங்கப் பாய் மா, புரவி மேல் முழங்க வீரர்,
பாரின் மேல் முழங்க யாவும், பகைவர் மேல் முழங்கி மொய்த்தார், |
"கருமேகத்தினும்
மேலாக யானைகள் முழங்கவும், கடலினும்
மேலாகத் திண்ணிய தேர்கள் முழங்கவும், தேரின் மேல் அமர்ந்திருந்த
அரசர் முழங்கவும், திசைகள் எங்கும் போர்ப்பறை முழங்கவும், பாயும்
குதிரைகள் போரின் மேல் ஆர்வங் கொண்டு முழங்கவும், குதிரைமீது
அமர்ந்திருந்த வீரர் முழங்கவும், பூமியின் மேலுள்ள எல்லாமே
முழங்கவும், யூதர் முழங்கிய வண்ணம் பகைவர் மேல் பாய்ந்து
மொய்த்தனர்.
'யூதர்'
என்ற எழுவாய் வருவித்து உரைக்கப்பட்டது. 'மன்னர்'
என்றது, யூதர் முன் வென்றுகொண்ட மன்னர் என அறிக.
சோசுவன்
போர்த் திறம்.
- விளம்,
கூவிளம், கூவிளம், கூவிளங்காய்.
| 57 |
யானையெ
ழுங்கட லேந்திய தேர்பரிகாற்
சேனையெ ழுங்கடல் சென்றுசெ ழுங்கடல்மே
லேனையெ ழுங்கடல் மோதலெ னப்பகைவர்
தானையெ ழுங்கட லோடுத லைப்படுமால். |
| |
"யானை எழும்
கடல், ஏந்திய தேர் பரி கால்
சேனை எழும் கடல் சென்று, செழுங் கடல் மேல்
ஏனை எழும் கடல் மோதல் என, பகைவர்
தானை எழும் கடலோடு தலைப்படுமே. |
|