பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்136

     "யானைப் படையாக எழும் கடலும், உயர்ந்த தேர் குதிரை
காலாட் படைகளாக எழும் கடலும் முன்னே சென்று, செழுமையாக கடலின்
மேல் எழுந்து வரும் மற்றொரு கடல் மோதுதல் போல, பகைவர் படையாக
எழும் கடலோடு யூதர் படை நெருங்கும்.


              58
செல்லுகு மாரியெ னச்சின முற்றியநீள்
வில்லுகு மாரிமி டைந்துமி டைந்தனர்வாய்ச்
சொல்லுகு மாரிசு ளித்தமு ழக்க மெழீஇ
யல்லுகு மாரிய கத்தன ரஞ்சினரால்.
 
"செல் உகும் மாரி என, சினம் முற்றிய நீள்
வில் உகும் மாரி மிடைந்து, மிடைந்தனர் வாய்ச்
சொல் உகும் மாரி சுளித்த முழக்கம் எழீஇ,
அல் உகும் மாரி அகத்தனர் அஞ்சினர் ஆல்.

     "மேகத்தினின்று சொரியும் மழைபோல, யூதர் தம் சினம் முதிர்ந்த
நெடிய வில்லினின்று சொரியும் அம்பாகிய மழை தம்மேல் வந்து
செறியவும், செறிந்த யூதர் தம் வாய்ச்சொல்லாக உதிரும் மழையும் சினந்த
முழக்கம் தம் மீது வந்து மோதவும், இருளில் பொழியும் மழை போல்
இருண்ட உள்ளத்தினராகிய அப்பகைவர் அஞ்சினர்.

     'ஆல்' இங்கும் தொடர்ந்து வரும் பாடல்களிலும் அசைநிலை எனக்
கொள்க.

               59
நெஞ்சுறை நீள்கவ சத்தொடு நேரலர்தந்
நஞ்சுறை நெஞ்சற நஞ்சுறை வெஞ்சரமொய்த்
தெஞ்சுறை விஞ்சிய குஞ்சர மிற்றததின்
மஞ்சுறை யுஞ்சினர் வஞ்சகர் துஞ்சினரால்
 
"நெஞ்சு உறை நீள் கவசத்தொடு, நேரலர் தம்,
நஞ்சு உறை நெஞ்சு அற நஞ்சு உறை வெஞ் சரம்
                                   மொய்த்து,
எஞ்சு உறை விஞ்சிய குஞ்சரம் இற்றது; அதின்
மஞ்சு உறையும் சினர் வஞ்சகர் துஞ்சினர் ஆல்.