|
| 62 |
தோலொடு
தோல்பொர மீமிசை துள்ளியெழீஇக்
கோலொடு கோல்பொரு கொள்கையின் வாசிபொரக்
காலொடு கால்பொர நேமிக லந்துலகின்
னாலொடு நாறிசை நாதந ரன்றனவே. |
| |
"தோலொடு தோல்
பொர, மீமிசை துள்ளி எழீஇ,
கோலொடு கோல் பொரு கொள்கையின் வாசி பொர,
காலொடு கால் பொர நேமி கலந்து, உலகின்
நாலொடு நால்திசை நாதம் நரன்றனவே. |
"யானைகளோடு
யானைகள் போரிடவும், மிக உயரமாய்த்
துள்ளி எழுந்து, அம்போடு அம்பு போரிடும் தன்மை போல், குதிரைகள்
போரிடவும், காற்றோடு காற்று மோதுவது போல் தேர்ச்சக்கரங்கள் கலந்து
போரிடவுமாக, எட்டுத் திசைகளும் ஓசையால் முழங்கின".
| 63 |
மேகநி கர்த்தன
வேழம ருப்புமிதித்
தேகம றுத்தலி னானையெ னப்புயல்பாய்
வேகவி னப்பரி மேகமு குக்குருமொத்
தாகவ ரைத்துக ளாகவு ழக்கினவால். |
| |
"மேகம் நிகர்த்தன
வேழ மருப்பு மிதித்து,
ஏகம் அறுத்தலின், ஆனை எனப் புயல் பாய்
வேக இனப் பரி, மேகம் உகுக்கு உரும் ஒத்து,
ஆக வரைத் துகளாக உழக்கின ஆல், |
"கரு மேகத்திற்கு
ஒப்பான யானைகளின் கொம்பை மிதித்து,
அவற்றை ஒருங்கு அறுத்து ஒழித்த பின், யானைகளோ என மயங்கி
மேகத்தின்மீது பாய்ந்த வேகமுள்ள குதிரை இனங்கள், அம்மேகம்
விடுக்கும் இடியைப் போன்று சீறி, தம் காலுக்குள் அகப்பட்ட பகைப்
படைவீரரைப் புழுதியாக மிதித்துக் கலக்கின."
'ஆல்'
அசை நிலை.
|