|
| 130 |
அகலவவர்
யூதரெதி ரகலமுற வந்தரிக ளகலமுல வச்சுருதி
வாய்மைப்
புகலனைய வாடரிய கொடியகணை யேவலொடு புரவிகரி
தேர்விரிப தாதி
யிகலவரி னால்வகைகள் சிவையொடற வீர்ந்தவள வெதிரமரி
னாலரசர் வையம்
நகலமடி வாயபழி யழலவுள முந்திரத நடவியது னீசதனெ
திர்ந்தான். |
| |
"அகல அவர்,
யூதர் எதிர் அகலம் உற வந்து, அரிகள் அகலம்
உலவச்
சுருதி வாய்மைப்
புகல் அனைய வாடு அரிய கொடிய கணை ஏவலொடு, புரவி கரி
தேர்
விரி பதாதி
இகலவரின் நால் வகைகள் சிவையொடு அற ஈர்ந்த அளவு, எதிர்
அமரின்
நால் அரசர் வையம்
நகல மடிவு ஆய பழி அழல, உளம் முந்து இரதம் நடவி
அதுனீசதன்
எதிர்ந்தான். |
"பகைவர் அவ்வாறு
அகலவும், யூதர் அவர்க்கு எதிராகத்
தொடர்ந்து ஓடி மார்பு காண வந்து நின்று, அப்பகைவர்தம் மார்பிலே
பட்டு உலாவுமாறு, வேதத்தின் உண்மைச் சொல் போல வாடாத கொடிய
அம்புகளை ஏவினர். அதனோடு, அப் பகைவரின் குதிரை யானை தேர்
விரிந்த காலாள் என்ற நால் வகைப் படைகளையும் வேரோடு
அறுத்தொழித்தனர். அவ்வளவில், எதிர்த்துச் செய்த போரில் நான்கு
மன்னர்களும் உலகம் நகைக்குமாறு மடிந்ததனால் ஏற்பட்ட பழி தன்
உள்ளத்தைச் சுடவும், அவ்வுள்ளத்தினும் விரைந்து செல்லும் தேரைச்
செலுத்தி வந்து, அதுனீசதன் என்ற மன்னன் போரை எதிர் கொண்டான்.
முதுகு காட்டி
ஓடியவர் மேல் அம்பு எய்தல் வீரத்திற்கு
இழுக்காதலின், அவரையும் ஓட்டத்தில் முந்தி வந்து, அவர் தம்
மார்பைக்கண்டு, அம் மார்பின் மீது யூதர் அம்பு ஏவினர் எனக் கொள்க.
நகல - நக : 'நகு' என்ற பகுதியால் வந்த 'நகல்' என்ற தொழிற் பெயரைப்
பகுதி எனக்கொண்டு அமைந்த 'செய' என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.
|