பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்192

     200 * 300 = 60000. 2 * 2 = 4.

               133
இடச்சிறைத் தலைவனென் றிகுல னாய்வலம்
படச்சிறைத் தலைவனாய் நிகலற் பார்த்திபன்
விடச்சிறைக் குயிர்நடு வணியில் வேய்ந்துதான்
றடச்சிறைத் திகிரிமேற் சினந்து தாக்கினான்.
 
"இடச் சிறைத் தலைவன் என்று இகுலன் ஆய், வலம்
படு அச் சிறைத் தலைவனாய் நிகலற் பார்த்திபன்
விட, சிறைக்கு உயிர் நடு அணியில் வேய்ந்து தான்,
தடச் சிறைத் திகிரி மேல் சினந்து தாக்கினான்.

     "இடப் பக்கத்துச் சிறகுக்குத் தலைவனாக இகுலன் அமையவும், வலப்
பக்கம் அமைந்த அச்சிறகுக்குத் தலைவனாக நிகுலனை அரசன் நியமித்து,
தான் இரண்டு சிறகுகளுக்கும் உயிராகிய நடு அணியில் பொருந்தி, பெரிய
சிறகு கொண்டு பறப்பது போன்ற தேரின் மேல் நின்று சினந்து தாக்கினான்.

               134
பெரியவர் கேண்மைபோற் பீடை யிற்றிளைத்
தரியவை கண்டெழு மடலிற் சோசுவன்
கரியவல் லியானையர் கனையன் சச்சுத
னுரியிரு வகுப்பில்விட் டுருமின் முட்டினான்
 
"பெரியவர் கேண்மை போல் பீடையில் திளைத்து,
அரியவை கண்டு எழும் அடலின், சோசுவன்,
கரிய வல் யானையர் கனையன் அச்சுதன்
உரி இரு வகுப்பில் விட்டு, உருமின் முட்டினான்.

     "பெரியவர் நட்புப் போலத் துன்பத்தில் எழுச்சி கொண்டு, அரியவை
கண்டவிடத்து எழுந்து தோன்றும் ஆண்மையால், சோசுவன், கரிய வலிமை
வாய்ந்த யானைமேல் அமர்ந்திருந்த கனையனையும் அச்சுதனையும் தமக்கு
உரிய இரண்டு அணிகளில் பிரித்து இரு புறம் விட்டுக் கொண்டு, தானும்
நடுவணியில்நின்று இடி போல மோதினான்.