பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்194

     'அரோ' அசைநிலை.

             137
ஆரிரு ணெடுமையா ராடு மூசல்போற்
பேரிரு படைதமுட் பிரிந்து சேர்ந்துவெம்
போரிரு முகமுரி வின்றிப் போர்செய்வா
ரோரிரு புனலென வுதிர மோடவே.
 
"ஆர் இருள் நெடுமையார் ஆடும் ஊசல் போல்,
பேர் இரு படை தமுள் பிரிந்து சேர்ந்து, வெம்
போர் இரு முகம் முரிவு இன்றி, போர் செய்வார்,
ஓர் இரு புனல் என உதிரம் ஓடவே.

     "நிறைந்த இருள் போன்ற கூந்தலையுடைய மகளிர் ஆடும்
ஊஞ்சல் போல், பெரிய இரண்டு படைகளும் தம்முள் பின் வாங்கிப்
பிரிந்தும் முன்வந்து மோதிச் சேர்ந்தும், கொடிய போரில் இரு
பக்கத்துக்கும் தோல்வி இல்லாமல், இரண்டு ஆறுகள்போல் உதிரம்
ஓடப் போர் செய்வர்.

               138
இடமுகத் திகுலனார்த் தெரித்த சூளையிற்
றடமுகத் தெழும்படை தாக்குந் தன்மையிற்
படமுகத் தெதிர்த்தனர் முரியப் பார்த்துமால்
கடமுகத் திபத்துயர் கனையன் சீறினான்.
 
"இட முகத்து இகுலன், ஆர்த்து, எரித்த சூளையின்,
தட முகத்து எழும் படை தாக்கும் தன்மையின்,
பட முகத்து எதிர்த்தனர் முரியப் பார்த்து, மால்
கட முகத்து இபத்து உயர் கனையன் சீறினான்."

     "அதுனீசதனின் இடப் பக்கத்து அணித் தலைவனாகிய இகுலன்
எரித்த சூளைபோல் சினந்து முழங்கி, பரந்து கிடந்த போர் முனையில்
எழுந்து நின்ற சோசுவன் படையைத் தாக்கும் தன்மையால் நேர்முகமாய்
எதிர்த்து நின்ற அப்படை வீரர் முறிந்தோடப் பார்த்து, மதத்தால் மயக்கங்
கொண்ட யானை மேல் அமர்ந்திருந்த கனையன் என்னும் தலைவன்
சீறினான்.