பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்196

               141
முரிந்ததன் றானையை முனிந்தும் மீட்டிலான்
கரிந்தகை கடித்திடித் திகுலன் காற்றென
வரிந்தவிற் கனையனை நோக்கி வந்தெதிர்
சொரிந்தமுன் மதகரி தூண்டி னானரோ.
 
"முரிந்த தன் தானையை முனிந்தும் மீட்டிலான்,
கரிந்த கை கடித்து, இடித்து, இகுலன், காற்று என
வரிந்த வில் கனையனை நோக்கி வந்து, எதிர்
சொரிந்த மும் மத கரி தூண்டினான் அரோ.

     "இகுலன், முறிந்தோடிய தன் சேனையைச் சினந்தும் திருப்பிக்
கொணர இயலாதவனாய், கரிந்த தன் கையைத் தானே கடித்துக் கொண்டு,
இடிபோல் முழங்கி, நாணால் வரிந்து கட்டிய வில்லையுடைய கனையனை
நோக்கிக் காற்றுப் போல் விரைந்து வந்து, மும்மதம் சொரிந்த தன்
யானையைத் தூண்டி செலுத்தினான்.

     'அரோ' அசை நிலை.

               கனையன் - இகுலன் போர்

     - மாங்கனி, புளி மாங்கனி, புளிமாங்கனி, புளிமா

                    142
பொன்னாணினர் மணிவில்லினர் பொறியம்பினர் புகையுஞ்
சொன்னாவினர் சயநெஞ்சினர் சுடுகண்ணினர் சுடர்பூண்
மின்னாறினர் புலைநாறினர் விறல்வாளினர் மதமார்
கொன்னாளியி னிருமாவுயர் கொலையீரிமர் பொருதார்
 
"பொன் நாணினர், மணி வில்லினர், பொறி அம்பினர், புகையும்
சொல் நாவினர், சய நெஞ்சினர், சுடு கண்ணினர், சுடர் பூண்
மின் நாறினர், புலை நாறினர், விறல் வாளினர், மதம் ஆர்
கொன் ஆளியின் இரு மா உயர் கொலை ஈர் இமர் பொருதார்.

     "பொன் மயமான நாணும், வைர மணி போன்று உறுதியான வில்லும்,
நெருப்புப் பொறி போன்ற அம்பும், புகையும் சொல்லைக்கொண்ட நாவும்,
வெற்றி கருதிய நெஞ்சும், சுடும் தன்மையான கண்ணும். மின்னலைத்
தோற்றுவிக்கும் ஒளியுள்ள அணிகலனும், புலால் நாறும் உடலும், வலிமை