|
பொருந்திய வாளும்
உடையவராய், கொடிய யாளியைப் போன்ற இரு
யானைகள் மீது அமர்ந்து, கொல்லுந் தொழிலுக்குரிய இரண்டு யமர்
போல அவ்விருவரும் போர் செய்தனர்.
'சுடர் பூண்
மின் நாறினர்' என்பதனை, 'மின் நாறு சுடர் பூணினர்'
என மாற்றிக் கூட்டுக. இமர் - இயமர்; யமர்.
| 143 |
சொல்வாயுகு
சுடுதீயொடு சுளிகண்ணழ லுகநீர்ச்
செல்வாயுகு விடியார்ப் பொடு சினவாயுயி ருணநீள்
வில்வாயுகு கணைமாரியின் விரிபோ ரிருமுகமுங்
கொல்வாயுகு கறைதாறில கொடிதாயம ரெழுமால். |
| |
"சொல் வாய்
உகு சுடு தீயொடு சுளி கண் அழல் உக, நீர்ச்
செல் வாய் உகு இடி ஆர்ப்பொடு சின வாய் உயிர் உண, நீள்
வில் வாய் உகு கணை மாரியின் விரி போர் இரு முகமும்
கொல் வாய் உகு கறை தாறு இல, கொடி தாய் அமர் எழும்
ஆல். |
"சொல்லும்
வாயினின்று சொரிந்த சுடும் நெருப்போடு சினந்த
கண்ணினின்றும் நெருப்பு சொரியவும், நீர் கொண்ட மேகத்தினின்று
பிறக்கும் இடியை ஒத்த முழக்கத்தோடு சினந்த அம்புகளின் முனை
உயிரை உண்ணுமாறும், நீண்ட வில்லினின்று சொரியும் அம்பு மாரியால்
ஆகிய விரிந்த போர் இரு பக்கத்தும் கொலை நடத்துகையில் சொரியும்
உதிரத்திற்கு அளவு ஒன்று மின்றிக் கொடிதாய் அப்போர் நிகழும்.
| 144 |
தடவித்திரி
யியமற்கிணை தடவிற்குனி கனையன்
னடவித்திரி மதவத்தியி னடுமத்தக நுழையக்
கடவித்திரி கணைதைத்தெனக் களியுற்றன னிகுலன்
சுடவிற்றிறல் கணைமட்டில தொடைவிட்டன னவனே. |
| |
"தடவித் திரி
இயமற்கு இணை தட வில் குனி கனையன்
நடவித் திரி மத அத்தியின் நடு மத்தகம் நுழையக்
கடவித் திரி கணை தைத்து எனக் களி உற்றனன் இகுலன்.
சுட வில் திறல் கணை மட்டு இல தொடை விட்டனன் அவனே. |
|