பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்198

     "உயிர்களைக் கொல்லத் தடவித் திரியும் யமனுக்கு இணையாகப்
பெரிய வில்லை வளைக்கும் கனையன் நடத்திச் செல்லும் மத யானையின்
நடு நெற்றியில் நுழையுமாறு தான் செலுத்தி விட்ட அம்புகள் தைத்தன
என்று கண்டு இகுலன் களிப்படைந்தான். அக்கனையனும் கடும்
தன்மையாகத் தன் வில்லாற்றலால் அம்புகளை அளவற்ற தொடுப்புகளாக
ஏவிக் கொண்டிருந்தான்.

     'அந்தகன்' என்ற தன் மற்றொரு பெயருக்கு ஏற்ப, 'தடவித் திரி
யமன்' என்ற பொருத்தம் காண்க.

                   145
இசையுண்டுறு கணையும்பட விகுலன்றனு வொடியக்
கசையுண்டுறு முரமும்பக வளவொன்றில கணைகள்
விசையுண்டுற வளையம்பட விசையந்தனு வளைய
வசையுண்டுற வொலிபொங்கின மடிவின்முக மறவே.
 
"இசை உண்டு உறு கணையும் பட இகுலன் தனு ஓடிய,
கசை உண்டு உறும் உரமும் பக அளவு ஒன்று இல கணைகள்
விசை உண்டு உற, வளையம் பட விசை அம் தனு வளைய,
வசை உண்டு உற ஒலி பொங்கின மடி வில் முகம் அறவே.

     "இவ்வாறு கனையன் இசைவாகச் செலுத்திய அம்புகள் பட்டு
இகுலனின் வில் ஒடிந்தது. பின்னும், கவசம் பூண்டுள்ள இகுலனின்
மார்பையும் பிளக்குமாறு கனையன் அளவில்லாத அம்புகளை விசை
கொண்டு செலுத்துமாறு, விசை கொண்ட தன் அழகிய வில்லை வளையம்
போல் வளைக்க முற்பட்டான். அவ்வாறு மடித்த வில்லின் நுனி ஒடியவே,
தனக்கு வசை நேருமாறு எதிரிகளின் ஆரவார ஒலிகள் மிகுந்தன.

                 146
பதமேற்படப் பவளத்தொடு பதிமுத்தென விருவ
ரிதமேற்பட வெயிறுய்த்தன ரெறிபற்படை யிலராய்க்
கதமேற்பட வயநெட்டிரு கதையிட்டிரு கனல்போன்
மதமேற்பட வுறுமத்திகள் மறலத்தமுள் விடுவார்.
 
பதம் ஏற்பட., பவளத்தொடு பதி முத்து என இருவர்,
இதம் ஏற்பட, எயிறு உய்த்தனர் எறி பல் படை இலராய்க்
கதம் ஏற்பட, வய நெட்டு இரு கதை இட்டு, இரு
                                 கனல் போல்
மதம் ஏற்பட உறும் அத்திகள் மறலத் தமுள் விடுவார்.