பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்199

     "இவ்வாறு இருவர் வில்லும் ஒடிந்தமையால் போர் பதப் பட்டுத்
தேங்கவே, தத்தமக்கு நன்மை ஏற்படுமாறு, பவளத் திடையே பதித்த
முத்துப் போல் தம் உதட்டின் மீது பல்லை அழுத்தியவராய் இருவரும்
எதிரி மீது எறியும் பலவகைக் கருவிகளில் ஒன்றும் இல்லாதவராய்ச் சினம்
ஏற்படவே, வலிமை வாய்ந்த நெடிய இரண்டு கதாயுங்களைத் துதிக்கைகயில்
இட்டு வைத்து, மதம் ஏற்பட்டமையால் இரண்டு நெருப்புப் போல் மாறும்
தம் யானைகளைத் தமக்குள் போரிடுமாறு ஏவி விடுவர்.

     நெடுமை + இரு - நெடு + இரு - நெட்டு + இரு = நெட்டிரு.

                147
இருகார்பல வெரியேறுக விளையாடின வெனவே
செருவார்கள மிடையாடுகத் திரடீயெழ வலறிப்
பொரு யானைகள், கதைவீசிய பொருவாவிசை படலோ
டருகாயின படையாவையு மடிநூறின பொருதே.
 
"இரு கார் பல எரி ஏறு உக விளையாடின எனவே,
செரு ஆர் களம் இடை ஆடுக, திரள் தீ எழ அலறிப்
பொரு யானைகள் கதை வீசிய பொருவா விசை படலோடு
அருகு ஆயின படை யாவையும் அடி நூறின பொருதே.

     "இரண்டு கரு மேகங்கள் நெருப்போடு கூடிய பல இடிகள்
விழுமாறு விளையாடின என்று சொல்லத் தக்கவண்ணம், போர் நிறைந்த
அக்களம் இடையே நடுங்குமாறும் திரண்ட நெருப்பு அங்கு எழுமாறும்
முழங்கிப் போரிட்ட அவ்யானைகள், தம் துதிக்கையிற் கொண்ட
கதாயுதங்களை வீசிய ஒப்பற்ற விசை தங்களைத் தாக்கவும், அவற்றின்
அருகே எதிர்ப்பட்ட படைகளெல்லாம் போரிட்டு அடியோடு அழிந்தன.

     ஆடுக - ஆட; குகரம் இடையே சாரியை.

                148
திரிகின்றன விருதீநிகர் திரிகின்றன வெவணு
மெரிகின்றன வெதிர்யாவது மிரிகின்றன ரெவரும்
பிரிகின்றன வெதிர்சீறின பிளிர்கின்றன வழலை
விரிகின்றன கதையேமிசை விசைவெங்கதை படவே.