பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்200

"திரிகின்றன இரு தீ நிகர்; திரிகின்றன எவணும்,
எரிகின்றன எதிர் யாவதும்; இரிகின்றனர் எவரும்,
பிரிகின்றன எதிர் சீறின; பிளிர்கின்றன அழலை
விரிகின்றன, கதையே மிசை விசை வெங்
                          கதை படவே,

     "அவ் யானைகள் இரு நெருப்புக்கு நிகராகப் போர்க்கள மெங்கும்
திரிகின்றன; அவை திரிகின்ற எவ்விடத்தும் எதிர்ப்பட்ட யாவும் எரிகின்றன;
எதிர்ப்பட்ட எவரும் விலகி ஓடுகின்றனர். பின் வாங்கிய தன்மையாய்ப்
பிரிகின்ற அவ்யானைகள் மீண்டும் எதிரெதிராய்ச் சீறின; ஓர் யானையின்
கதைமீது மற்றொரு யானையின் கொடிய கதை மோதவே, கொப்பளிக்கின்ற
நெருப்பை எங்கும் பரப்புகின்றன.

                 149
அழலக்கதை யழலக்கரி யழலக்கரி மிசையார்
சுழலக்கதை யிகுலற்கரி சுழல்தற்கதை பறிபட்
டெழவிட்டிசை யுறிமற்றது வெதிர்பட்டிடு
                            கதைமேல்
விழமத்தக மடியிற்பக விழுமக்கரி படவே
 
"அழலக் கதை, அழலக் கரி, அழலக் கரி மிசையார்,
சுழலக் கதை, இகுலன் கரி சுழல் தன் கதை, பறிபட்டு
எழ விண் திசை உறி, மற்றது எதிர் பட்டு இடு
                                கதைமேல்
விழ, மந்தகம் அடியில் பக, விழும் அக் கரி படவே

     "கதைகள் ஒன்றோடொன்று மோதி எரியவும், அவற்றைத் தாங்கிய
யானைகள் எரியவும், யானைகள் மீது அமர்ந்திருந்தோர் எரியவுமாக
அக்கதைகள் சுழலும். இகுலனது யானை சுழற்றிய தன் கதை துதிக்கையி
னின்று பறிபட்டு, எழுந்து வானத்தின்கண் சென்றது. அப்பொழுது,
கனையனின் மற்ற யானை எதிர்ப்பட்ட இட்ட கதை தன்மேல் விழவே,
தன் நெற்றி அடியோடு பிளக்க, அதனால் அவ்யானை இறந்து தரையில்
விழும்.

     இகுலன் + கரி - உயர்திணைப் பெயர்ப் புணர்ச்சியில் ஈற்று மெய்
இயல்பாக நின்று. 'இகுலன்கரி' என வரவேண்டியது, செய்யுள் வல்லோசைப்
பொருட்டு, 'இகுலற்கரி ' என நின்றது. விட்டிசை - விண் + திசை. மற்றது
- இகுலன்கரி அல்லாத மற்றது: கனைபன்கரி.