பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்201

                  150
கிரிநின்றிழி புலியென்றெரி கிளர்வெஞ்சின விகுலன்
கரிநின்றிழி தரமின்றவழ் கனல்மண்டசி யொடுபாய்ந்
தெரிகின்றிழி கதைமுன்விழ வெயிறுள்ளுர முருவிச்
சொரிகின்றிழி கறைசிந்துகச் சுழல்கொண்டெறி தருமே.
 
"கிரி நின்று இழி புலி என்று, எரி கிளர் வெஞ் சின இகுலன்,
கரி நின்று இழிதர, மின் தவழ் கனல் மண்டு அசியொடு பாய்ந்து,
எரிகின்று இழி கதை முன் விழ, எயிறு உள் உரம் உருவி,
சொரிகின்று இழி கறை சிந்துகச் சுழல் கொண்டு எறிதருமே.

     "நெருப்பைக் கக்கும் கொடிய சினங் கொண்ட இகுலன்,
மலையினின்று பாயும் புலிபோலத் தன் யானையினின்று இறங்கி, மின்னல்
தவழும் நெருப்புடன் கூடிய தன் வாளோடு பாய்ந்து, எரிகின்ற
தன்மையாய்த் தன்மீது பாய்ந்த கதாயுதத்தின்முன் சிக்கி அடிபட்டு
விழுந்தான். விழவும், கனையனின் அவ்யானை தன் கொம்பினால் அவன்
மார்பை ஊடுருவக் குத்தித் தூக்கி, சொரிந்த வண்ணமாய்ப் பாயும் குருதி
சிந்தச் சுழற்றி எறியும்.

     எனவே அவன் மடிந்தானென்பது பெறப்படும். சிந்துக - சிந்த :
இடையே குகரம் சாரியை.

                    சச்சுதன் நிகலன் போர்

     புளிமா, கூவிளம், புளிமா, கூவிளம், புளிமா, கூவிளம் கருவிளம்.

                    151
இடிமு ழங்கின முகிலொ டுங்கட லிணைமு ழங்கின
                                   வொலியெனாத்
துடிமு ழங்கின தொனியெ ழுந்திவர் துறுவி வெஞ்சமர்
                                   பொருதகாற்
படிமு ழங்கின வொலிநி கர்ந்தில பருப தங்களு மதிரவே
கடிமு ழங்கின வலமு கஞ்சமர் கனல்சி னந்தென
                                   விளையுமால்