பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்202

"இடி முழங்கின முகிலொடும் கடல் இணை முழங்கின
                                 ஒலி எனா,
துடி முழங்கின தொனி எழுந்து இவர் துறுவி வெஞ்சமர்
                                 பொருத கால்,
படி முழங்கின ஒலி நிகர்ந்தில, பருபதங்களும் அதிரவே,
கடி முழங்கின வல முகம் சமர், கனல் சினந்து என,
                                 விளையும் ஆல்.

     "இடியோடு முழங்கிய மேகத்தோடு கடலும் இணைந்து முழங்கிய
ஒலி போல, போர் முரசு முழங்கிய தொனியோடு எழுந்து இவ்விருவரும்
இடப் பக்கம் நெருங்கி நின்று கொடும் போர் புரிந்து கொண்டிருந்த அதே
நேரத்தில், உலகத்தில் முழங்கின எவ்வொலியும் தனக்கு நிகரில்லாமல்,
மலைகளும் அதிருமாறு, நெருப்பே சினந்து எழுந்தாற் போல, வலப்
பக்கமும் மிகுதியாக முழங்கின போர் நிகழ்ந்து கொண்டிருக்கும்.

     பருபதம் - பருப்பதம் : இடைக்குறை. 'ஆல்' அசை நிலை.

                    152
கரிய தட்டிய சினமி ரட்டிய கடிய சச்சுத னிடைவிடா
தெரிய தட்டிய கொடிய வத்திர மிடையி டைக்கள
                                    விலவிடப்
பரிய தட்டிய விரத வெற்புகள் பரிக ளத்திகள் சிதறவெய்
யரிய தட்டிய கரியி னத்தெதி ரரிக ளுட்குறி முரிவரால்.
 
"கரி அதட்டிய சினம் இரட்டிய கடிய சச்சுதன், இடைவிடாது
எரி அதட்டிய கொடிய அத்திரம், இடையிடைக்கு அளவு
                                        இல விட,
பரி அதட்டிய இரத வெற்புகள் பரிகள் அத்திகள் சிதற, வெய்
அரி அதட்டிய கரி இனத்து, எதிர் அரிகள், உட்கு உறி
                                        முரிவர் ஆல்.

     "தான் ஏறியிருந்த யானையை அதட்டிய சினத்தோடு முழங்கிய
கடுமை கொண்ட சச்சுதன், இடை விடாமல் நெருப்பையும் அதட்டிய
கொடிய அம்புகளையும் இடையிடையே அளவில்லாத அம்புகளையும்
ஏவ, தம் குதிரைகள் அதட்டி இழுத்த தேராகிய மலைகளும் குதிரைகளும்
யானைகளும் சிதறவே, எதிர்த்து வந்த பகைவர், அரிமா அதட்டிய யானைக்
கூட்டம் போல, அச்சங்கொண்டு முறிந்து ஓடுவர்.