153 |
பணையி லாடிய
பரிகள் யானைகள் பரவு தேர்களு
மிவையெலா
மிணையி லாதற வுயரு வாமலை யிடையி லோடிய
வளவிலாக்
கணையின் வாரிமு னடையல் சாய்வன கறைய ளாவிய
பிணமிரண்
டணையி னேறின குருதி நீர்நிறை யருவி யோடின
வெவணுமே. |
|
"பணையில் ஆடிய
பரிகள் யானைகள் பரவு தேர்களும் இவை எலாம்
இணை இலாது அற, உயர் உவா மலை இடையில் ஓடிய அளவு இலாக்
கணையின் வாரி முன் அடையல் சாய்வன கறை அளாவிய பிணம், இரண்டு
அணையின் ஏறின; குருதி நீர் நிறை அருவி ஓடின எவணுமே. |
"பந்தியில்
தங்க வைத்திருந்த குதிரைகள் யானைகள் பரந்து கிடந்த
தேர்களுமாகிய இவையெல்லாம் ஈடு கொடுக்க இயலாமல் மீண்டும்
அடியோடு மடிந்து ஒழியவே, உயர்ந்த யானையாகிய மலையினின்று ஓடிப்
பாய்ந்த அளவில்லாத அம்பு வெள்ளத்தின் முன் ஒருங்கே சாய்வனவாகிய
குருதி அளாவிய பகைவர் பிணங்கள், இரண்டு கரைபோல் உயர்ந்து
நின்றன; எங்கும் குருதி வெள்ளம் நிறைந்த அருவிகள் ஓடின.
முந்திய
பாடலின்படி முறிந்தோடிய பகைவர் பந்தியில் தங்க
வைத்திருந்த குதிரை முதலியவற்றைக் கொணர்ந்து மீண்டும் போரிட்டு,
அவற்றோடு தாமும் அழிந்தனரென்பது கருத்து. யானையாகிய மலை,
அதன்மீது அமர்ந்திருந்த சச்சுதனைக் குறித்தது.
154 |
எதிரெ ழுந்துய
ரிரத நின்றம ரிடவு டன்றன நிகலனுங்
கதிரெ ழுந்தெரி கனல ழுந்திய கதம லிந்தடு முழுவைபாய்ந்
ததிரெ ழுந்துயர் வரைந டுங்குப வரிது டன்றென விடியிடித்
துதிரெ ழுந்தழ லுமிழ்ச ரங்கொடு வுயிர்வி ழுங்கின
னெவணுமே. |
|